என் மலர்
திருவள்ளூர்
பூந்தமல்லி:
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75 -வது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் 75 கிலோமீட்டர் பாதயாத்திரை கடந்த 9 - ந்தேதி மாதவரத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக கதிர்வேட்டில் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு முன்னிலையில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அருணாசலம், சாந்தகுமார், தரணிபாய், ரவி, ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, கபிலன், காமராஜ், புழல் குபேந்திரன் மற்றும் வட்டார, நகர, சர்க்கிள் தலைவர்கள் என்.வெங்கடேசன், ஏ.பி.சங்கர், ஆர்.வெங்கடேசன், எம்.சந்திரசேகர், ஏ.நித்தியானந்தம், எஸ்.கோபி, ஜெயராஜ், கவியரசன், பாபு, அமீத் பாபு, விஸ்வநாதன், சேதுபதி, மூர்த்தி, மணிகண்டன், சாந்தாராமன், சிவசங்கரன், சேகர், மாவட்ட நிர்வாகிகள் அச்சுதன், கிரிதரன், ஜான்பாஸ்கோ, மாரி, ராஜீவ்காந்தி, ரங்கநாயகி, லட்சுமி, பாபுராம், குமார், கணேசமூர்த்தி, ஆர்.எம்.தாஸ், தீனாள், எஸ்.ராஜீ, தீனதயாளன், வேல்முருகன், ரவிவளவன், கலையரசன், ஜிகா(எ)விக்ரம், இக்பால்பாஷா உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- கைதான 6 பேரும் கூட்டு சேர்ந்து தங்களது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் போலியான ஊழியர்கள் விபரங்களை உருவாக்கி அதில் அவர்களது வங்கி கணக்குகளை பதிவிட்டு சம்பள பணத்தை எடுத்து உள்ளனர்.
- மொத்தம் 93 வங்கி கணக்குகளில் செலுத்த கடந்த 3 ஆண்டுகளாக ரூ.6.95 கோடி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் கோபிநாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெரியார் நகரை சேர்ந்த விவேக்குமார், நாகப்பட்டினத்தை சேர்ந்த குமரவேல், வில்லிவாக்கத்தை சேர்ந்த தாமோதரன், சுரேஷ், ஆலங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார், திருவொற்றியூரை சேர்ந்த திலீப்குமார் ஆகிய 6 பேர் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக வேலைபார்த்து வந்தனர்.
அவர்கள் எங்களது நிறுவனத்தில் பணிபுரிவது போல் 129 போலி பணியாளர்களை உருவாக்கி தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ.6 கோடியே 95 லட்சம் வரை நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்து வந்தனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தினார்.
இதில் அந்த தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கைதான 6 பேரும் கூட்டு சேர்ந்து தங்களது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் போலியான ஊழியர்கள் விபரங்களை உருவாக்கி அதில் அவர்களது வங்கி கணக்குகளை பதிவிட்டு சம்பள பணத்தை எடுத்து உள்ளனர்.
மொத்தம் 93 வங்கி கணக்குகளில் செலுத்த கடந்த 3 ஆண்டுகளாக ரூ.6.95 கோடி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் அவர்கள் மோசடியில் சேர்த்த பணத்தை ஜாலியாக ஊர் சுற்றி உல்லாசமாக செலவு செய்து இருக்கிறார்கள்.
துபாய், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்று நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருக்கிறார்கள்.
இதேபோல் புனேயில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டையும் விமானத்தில் பறந்து சென்று பார்த்து ரசித்து வந்துள்ளனர். மிகவும் ஆடம்பரமாக செலவு செய்து இருக்கிறார்கள்.
கைதான 6 பேரும் அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் ஊதியம், பி.எப்.கணக்குகளை நிர்வகிக்கும் பணியில் இருந்து இருக்கிறார்கள்.
இதனால் அவர்களின் மோசடி வெளியில் தெரியாமல் 3 ஆண்டுகளாக நீடித்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது முன்னாள் ஊழியர் ஒருவர் தனது பி.எப். தொகையை கேட்டு அணுகி இருப்பதும் ஆனால் அந்த பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆய்வின் போது தான் 6 ஊழியர்களும் போலியாக ஊழயர்களின் பட்டியலை சேர்த்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தை விட்டு வெளியேறிய முன்னாள் ஊழியர்களின் பலரது பி.எப். பணத்தையும் அவர்கள் குறி வைத்து சுருட்டி இருப்பதாக போலீ சார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த மோசடியில் கைதானவர்களின் நண்பர்கள், உறவினர்க ளுக்கு உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.
- விஜயா செயினை பிடித்துக்கொண்டதால் அது அறுந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். போக்குவரத்து துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா (50). கணவன்-மனைவி இருவரும் திருவள்ளூரில் உள்ள கடைக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பேரம்பாக்கம் - சத்தரை சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.
உடனே விஜயா செயினை பிடித்துக்கொண்டதால் அது அறுந்தது. கொள்ளையர் தங்களது கையில் சிக்கிய 2½ பவுன் செயினுடன் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- காயத்ரிபரிதா தனது செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியதாக தெரிகிறது.
- தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டியில் வசித்து வருபவர் சித்தன்பரிதா.
கணவரை இழந்த இவர் அதே பகுதியில் சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் காயத்ரிபரிதா(வயது16). 10-ம் வகுப்பு படித்து உள்ளார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு காயத்ரிபரிதா தனது செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியதாக தெரிகிறது. இதனை அவரது தாய் கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த காயத்ரிபரிதா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு தாய் சித்தன்பரிதா அதிர்ச்சிஅடைந்தார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் காயத்ரி பரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
- ரமேஷ் விவசாய நிலத்தை பார்த்துக்கொள்ள மஞ்சஞ்காரணை கிராமத்தில் வந்து தங்கி இருந்து விட்டு செல்வது வழக்கம்.
- பீரோவை 2 மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை அள்ளினர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சஞ்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி.
இவரது மகள் சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். ரமேசுக்கு சென்னையிலும் வீடு உள்ளது. விவசாய நிலத்தை பார்த்துக்கொள்ள மஞ்சஞ்காரணை கிராமத்தில் வந்து தங்கி இருந்து விட்டு செல்வது வழக்கம்.
நேற்று இரவு வீட்டின் மாடியில் ரமேஷ் தூங்கினார். இந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்து சத்தம் வருவதை கேட்டு சந்தேகம் அடைந்த அவர் கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை 2 மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை அள்ளினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கூச்சலிட்டதும் கொள்ளையர்கள் 2 பேரும் வீட்டில் இருந்து நகை-பணத்துடன் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்றது. தற்போது மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.
- முத்தமிழியின் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே வீழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி முத்தமிழ் (26). இவர்களுக்கு ஜோசன் என்ற மகனும், லூவி டெரினா என்ற 7 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி குணா தனது மனைவி முத்தமிழ் மகன் ஜோசன், 7 மாத கைக்குழந்தை லூவி டெரினாவுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார்.
பின்னர் தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.
இதில் முத்தமிழியின் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே வீழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை லூவி டெரினா பரிதாபமாக இறந்து போனது.
இதுகுறித்து முத்தமிழ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென உமாதேவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர்.
திருவள்ளூர்:
சென்னை ஐகோரட்டில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் உமா தேவி. (49). இவர் குடும்பத்துடன் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். திருவள்ளூர் மீரா திரையரங்கம் எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டனர். பின்னர் காரில் ஏறுவதற்காக வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென உமாதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த உமாதேவி நகையை பிடித்தபோது அது அறுந்தது. இதையடுத்து 2½ பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.
- இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக அன்பரசன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்தார்.
இதனை மனைவி அனுசுயா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.ஆர் நகர் சாலை வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து முனுசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென சுமன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆவா ஜிப்பேட்டை கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது42). தனியார் நிறுவன ஊழியர். இவர் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.ஆர் நகர் சாலை வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து முனுசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
பூண்டி ஒன்றியம், பிளேஸ் பாளையம், காலனியைச் சேர்ந்தவர் சுமன்(22). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் இருளிப்பட்டு கிராமத்திற்கு சென்றார்.
கன்னிகைப் பேரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென சுமன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுமன் படுகாயம் அடைந்தார். சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
- கபிலர் தான் நீதிபதி என்றும், மகனின் மனைவி கொடுத்த வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறி மிரட்டி சென்றார்.
- கபிலரை கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜோதிலட்சுமி. இவரிடம் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த கபிலர் என்பவர் தான் நீதிபதி என்றும், மகனின் மனைவி கொடுத்த வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டி சென்றார்.
விசாரணையில் அவர் போலி நீதிபதி என்பது தெரிந்தது. இந்த நிலையில் கபிலரை கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்த வருகிறது.
- சென்னைக்கு வரும் கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம்.
- அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள டோல்கேட் அருகே வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். அவர்களை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தொடர்ந்து செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன், அமர்நாத், சுதர்சன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
- இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
பொன்னேரி அடுத்த சின்னம்பேடு, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து செல்வது வழக்கம். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர்களில் இருந்தும் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமிதரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன்.
இந்த நிலையில் கும்பாபிஷேக விழா பணியையொட்டி கோவில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வருகின்ற 20-ந்தேதி வரை மூலவரை தரிசிக்க இயலாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.






