தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை பலி

பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.முத்தமிழியின் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே வீழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி முத்தமிழ் (26). இவர்களுக்கு ஜோசன் என்ற மகனும், லூவி டெரினா என்ற 7 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி குணா தனது மனைவி முத்தமிழ் மகன் ஜோசன், 7 மாத கைக்குழந்தை லூவி டெரினாவுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார்.

பின்னர் தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

இதில் முத்தமிழியின் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே வீழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை லூவி டெரினா பரிதாபமாக இறந்து போனது.

இதுகுறித்து முத்தமிழ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com