என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
    X

    பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

    • ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.ஆர் நகர் சாலை வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து முனுசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென சுமன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆவா ஜிப்பேட்டை கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது42). தனியார் நிறுவன ஊழியர். இவர் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.ஆர் நகர் சாலை வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து முனுசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    பூண்டி ஒன்றியம், பிளேஸ் பாளையம், காலனியைச் சேர்ந்தவர் சுமன்(22). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் இருளிப்பட்டு கிராமத்திற்கு சென்றார்.

    கன்னிகைப் பேரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென சுமன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுமன் படுகாயம் அடைந்தார். சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×