என் மலர்

  நீங்கள் தேடியது "Tiruvallur suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜானகிராமன் (வயது 17). பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

  பிளஸ்-1 தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசிப்பவர் கண்ணன் (26). காக்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் நீண்ட நாளாக பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார்.

  பல பகுதிகளில் பெண் பார்த்தும் அவருக்கு எந்த வரனும் கிடைக்கவில்லை. இதனால் கண்ணன் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

  இந்த நிலையில் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற கண்ணன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

  இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×