என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake Judge Arrested"

    • கபிலர் தான் நீதிபதி என்றும், மகனின் மனைவி கொடுத்த வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறி மிரட்டி சென்றார்.
    • கபிலரை கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜோதிலட்சுமி. இவரிடம் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த கபிலர் என்பவர் தான் நீதிபதி என்றும், மகனின் மனைவி கொடுத்த வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறி மிரட்டி சென்றார்.

    விசாரணையில் அவர் போலி நீதிபதி என்பது தெரிந்தது. இந்த நிலையில் கபிலரை கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்த வருகிறது.

    ×