என் மலர்
திருவள்ளூர்
- திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிக அளவு ரேசன் அரசி கடத்தப்படுகிறது.
- குமார் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிக அளவு ரேசன் அரசி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பெரிய ஓபுளாபுரத்தில் 4 டன் ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற அதேபகுதியை சேர்ந்த முத்து, குமார் ஆகியோரை கடந்த 19-ந் தேதி கைது செய்தனர். இதற்கிடையே தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குமார் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்வர் செட்டி (வயது38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் மர்மமான முறையில் மகேஷ்வர் செட்டி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
- மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.
பெரியபாளையம்:-
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
இப்பள்ளியில், சுமார் 916 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 9வது வகுப்பு இ3 பிரிவில் படிக்கும் மதுரைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்(வயது14) என்ற மாணவனும், ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த தமிழ்ச் செல்வன்(வயது14) என்ற மாணவனும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவது, கொடுப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், தமிழ்ச்செல்வன் மயங்கி கீழே விழுந்தான்.
இதனைக் கண்ட அருகில் இருந்த மாணவர்கள் கூக்குரல் இட்டனர். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் அந்த மாணவனை மீட்டு ஆரணி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாக கூறினர்.
இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பவ இடத்துக்கு ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ஜெயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயம் ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலயத்தில் சாய்ராம் தியானம் கூடத்தில், சாய்பாபா பிறந்தநாள், ராம நவமியை முன்னிட்டு மூலவர் சாய்பாபாவை பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும் மூலவர் சாய்பாபாவிற்கு காக்கடர்த்தி, பாலாபிஷேகம் கலெக்டர் அபிஷேகம் துணி பூஜை மதிய ஆர்த்தி, சந்தியா ஆர்த்தி ஷோஜே ஆர்த்தி சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
சர்வ சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
- ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
- சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் ஸ்விகி ஊழியர்கள் உணவு விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஊழியர்கள் கூறுகையில் ,
ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் கிராமப்புற பகுதிகளை சென்றால் வழிப்பறி விபத்து ஏற்படுகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இஎஸ்ஐ பிஎப் பிடித்தல் ஏற்படுத்த வேண்டும்.
திருவள்ளூர் வட்டாரத்தில் 40 ஊழியர்கள் பணியாற்ற வந்தனர் தற்போது கூடுதலாக 40 பேர் நியமித்துள்ளனர். மேலும் வட்டத்திற்கு தனி மேலாளர்கள் நியமிக்க வேண்டும்.
சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர். பழைய ஊழியருக்கு ஆர்டர்கள் கொடுப்பதில்லை
மேலும் எவ்வளவு வேலை பார்த்தாலும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படும். என்றனர்.
திருவள்ளூர் வட்டாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட டெலிவரிகள் செய்யப்பட்டு மூன்று லட்சம் வரை வருவாய் ஈட்டினர்.
இந்த போராட்டத்தால் 3000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
- வரதப்பன் குட்டையில் நூறு நாள் திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது.
- ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் கட்டப்பட்டு உள்ள சுற்றுச்சு வரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த உளுந்தை ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலம் தனியார் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதால் அருகில் உள்ள வரதப்பன் குட்டையில் நூறு நாள் திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், உளுந்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அரசு நிலம் தொடர்பாக அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக ஆக்கிரமிப்பு அரசு நிலத்தில் கட்டப்பட்டு உள்ள சுற்றுச்சு வரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும். மேலும் வரதப்பன் குட்டைக்கு பொதுமக்கள் வரும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
- சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொன்னேரி போலீசார் பெண்களிடம் பேசுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய உப்பரபாளையம் கிராமத்தில் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதுகுறித்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில் அந்த நிலத்தின் ஆவணம் முழுவதும் வேறு 2 பேருக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்ததும் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
- மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் நண்பர்கள் இருந்துவிட்டனர்.
- இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோனிஷ் (வயது10). மெரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமாலை மாணவன் மோனிஷ், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் சைக்கிளில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.
அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மோனிஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்து நண்பர்கள் கவனிக்கவில்லை. இதனால் மோனிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே குளித்து விட்டு கரைக்கு திரும்பியதும் நண்பர்கள் உடன் வந்த மோனிசை தேடினர். அவர் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோனிசின் சைக்கிள் மற்றும் ஆடைகளை குளத்தில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் இருந்துவிட்டனர்.
இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் மோனிஷ் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு 11 மணியளவில் மோனிஷின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருவூரில் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமனோர் தங்களது தலைமுடியை ஒழுங்கற்ற முறையில் வெட்டி ஸ்டைலாக வலம் வந்தனர்.
- ஒழுங்கற்ற முறையில் தலைமுடியுடன் வந்த 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் மரத்தடியில் அமரவைத்தனர்.
திருவள்ளூர்:
பள்ளி மாணவர்கள் விதவிதமாக தங்களது தலைமுடியை வெட்டி வலம் வருகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும் கேட்பதில்லை.
இந்த நிலையில் விதவிதமான தலைமுடி ஸ்டைலில் வந்த மாணவர்களின் தலைமுடிய பள்ளியிலேயே ஆசிரியர்கள் நறுக்கிய ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.
திருவள்ளூரை அடுத்த திருவூரில் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமனோர் தங்களது தலைமுடியை ஒழுங்கற்ற முறையில் வெட்டி ஸ்டைலாக வலம் வந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர். தலைமுடியை ஒழுங்காக வெட்டி வருமாறு கூறினர். ஆனால் மாணவர்கள் தங்களது தலைமுடி ஸ்டைலை மாற்றாமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஒழுங்கற்ற முறையில் தலைமுடியுடன் வந்த 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பை சேர்ந்த சுமார் 50 மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியின் மரத்தடியில் அமரவைத்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கேயே சலூன் கடை உழியர் ஒருவர் மூலம் சீராக முடி வெட்டப்பட்டது.
தலைமையாசிரியை ராஜம்மா உத்தரவின் பேரில் பள்ளி ஓவிய ஆசிரியர் அருணன் மேற்பார்வையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
- போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் பணம்கட்டி ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.
பூந்தமல்லி:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மெரீனா மற்றும் புறநகர் பைபாஸ் சாலைகளில் பைக்ரேஸ், ஆட்டோ ரேஸ் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் செங்குன்றத்தில் இருந்து அலமாதி பைப்பாஸ் வழியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடப்பதாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணையை தொடங்கிய போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் ஆட்டோக்கள் சீறிப்பாய்ந்து ரேசில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ரேசில் ஈடுபட்டதாக அஸ்லாம் கான், சாலமன் தேவகுமார், அர்ஜுன், கோவிந்தராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துதனர். அவர்களிடம் இருந்து 4 ஆட்டடோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் பணம்கட்டி ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 4 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ ரேஸ் பற்றி தகவல் கிடைத்ததும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.
- பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- பூத வாகனத்தில் நடராஜர் கைலாய வாத்திய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.
மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 3-வது நாள் நிகழ்ச்சியாக பூத வாகனத்தில் நடராஜர் கைலாய வாத்திய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீஞ்சூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். மீஞ்சூர் வட்டார நாடார் சங்க தலைவர் அன்பழகன், செயலாளர் லிங்கராஜ், பொருளாளர் சிவசுப்பிரமணியம், துணை தலைவர் முனுசாமி, துணை செயலாளர் ஆனந்த சங்கர், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் கனகராஜ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கணேஷ், துணை தலைவர் ராஜ், துணை செயலாளர்கள் சதீஷ், முருகன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவ, மாணவியருக்கு காணொளி காட்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன
- பின்பற்ற வேண்டிய உணவு பழக்கம் மற்றும் பாதுகாப்பு பற்றியும் வலியுறுத்தப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி பாலாஜி நகர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அசோக் லேலண்ட் லேர்னிங் சார்பில் ரோட்டு ஸ்கூல் திட்டத்தின் மூலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ விழிப்புணர்வு வாகனம் மூலமாக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியருக்கு காணொளி காட்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலமாக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புற்றுநோய் வராமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், மாணவர்கள், பொதுமக்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை எனவும், பின்பற்ற வேண்டிய உணவு பழக்கம் மற்றும் பாதுகாப்பு பற்றியும் வலியுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






