என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    புற்றுநோய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    X

    புற்றுநோய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவ, மாணவியருக்கு காணொளி காட்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன
    • பின்பற்ற வேண்டிய உணவு பழக்கம் மற்றும் பாதுகாப்பு பற்றியும் வலியுறுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி பாலாஜி நகர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அசோக் லேலண்ட் லேர்னிங் சார்பில் ரோட்டு ஸ்கூல் திட்டத்தின் மூலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ விழிப்புணர்வு வாகனம் மூலமாக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியருக்கு காணொளி காட்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலமாக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புற்றுநோய் வராமல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், மாணவர்கள், பொதுமக்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை எனவும், பின்பற்ற வேண்டிய உணவு பழக்கம் மற்றும் பாதுகாப்பு பற்றியும் வலியுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×