என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
- திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிக அளவு ரேசன் அரசி கடத்தப்படுகிறது.
- குமார் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு அதிக அளவு ரேசன் அரசி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பெரிய ஓபுளாபுரத்தில் 4 டன் ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற அதேபகுதியை சேர்ந்த முத்து, குமார் ஆகியோரை கடந்த 19-ந் தேதி கைது செய்தனர். இதற்கிடையே தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குமார் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.






