search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto race"

    • போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் பணம்கட்டி ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பூந்தமல்லி:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மெரீனா மற்றும் புறநகர் பைபாஸ் சாலைகளில் பைக்ரேஸ், ஆட்டோ ரேஸ் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் செங்குன்றத்தில் இருந்து அலமாதி பைப்பாஸ் வழியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடப்பதாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணையை தொடங்கிய போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் ஆட்டோக்கள் சீறிப்பாய்ந்து ரேசில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ரேசில் ஈடுபட்டதாக அஸ்லாம் கான், சாலமன் தேவகுமார், அர்ஜுன், கோவிந்தராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துதனர். அவர்களிடம் இருந்து 4 ஆட்டடோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் பணம்கட்டி ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 4 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    ஆட்டோ ரேஸ் பற்றி தகவல் கிடைத்ததும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    பூந்தமல்லியில் பொது மக்களை மிரட்டும் வகையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அருகே தாம்பரம் - மீஞ்சூர் வெளிவெட்ட சாலையில் ‘பைக்’ ரேஸ், ஆட்டோ ரேஸ் நடப்பதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்று அதிகாலை பைக் ரேஸ் தடுப்பு போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றனர்.

    இதையடுத்து மலையம்பாக்கம் அருகே ரேசில் ஈடுபட்ட 6 ஆட்டோக்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அதிலிருந்த திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ், மாங்காடு மணிகண்டன், பாடியை சேர்ந்த கணேஷ், சங்கர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 20-க்கும் மேற்பட்ட தப்பி ஓடிவிட்டனர்.

    கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது லட்சக்கணக்கில் செலவு செய்து ஆட்டோவின் என்ஜினை மாற்றியமைத்து ஆட்டோ ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பந்தயத்தில் 2 ஆட்டோக்கள் மட்டும் போட்டி போட்டு உள்ளது. அதனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பணம் கட்டியவர்கள் வந்துள்ளனர். இதற்கு பந்தயமாக லட்சக் கணக்கில் பணம் கட்டி இருக்கிறார்கள்.

    அதிகாலை நேரத்தில் நடத்தப்படும் இந்த ஆட்டோ - பைக் ரேசால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ரேசில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×