என் மலர்
திருவள்ளூர்
- அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
- இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மீஞ்சூர்:
அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2வது அலகில் செயல்பட்ட கொதிகலனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
+2
- சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் து.இளங்கோ படத்தை மாநிலத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்தார்.
- ஜாக்டோ ஜியோ சார்பில் 11-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது.
பெரியபாளையம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் எல்லாபுரம் வட்டார கிளை மற்றும் எல்லாபுரம் வட்டார ஆசிரியர் நல அமைப்பின் சார்பில் பெரியபாளையத்தில் உள்ள ஏ.டி.மஹால் திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் து.இளங்கோ படத்திறப்பு விழா, ஓய்வு பெற்ற எட்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிரியைகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,வட்டாரத் தலைவர் பொ.செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியர் நல அமைப்பின் வட்டாரத் தலைவர் த.பார்த்திபன், வட்டார பொருளாளர் து.ஆனந்தன், வட்டாரச் செயலாளர் இரா.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் மாநிலத்தலைவர் து.இளங்கோ படத்தை மாநிலத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்து இயக்கப்பேருரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பொதுச் செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி பொன்னாடை அணிவித்தார்.
மாநில பொருளாளர் சே.நீலகண்டன் நினைவு பரிசை வழங்கினார். வட்டார மற்றும் மாவட்ட செயலாளர் பா.ராஜாஜி மகளிர் தின விழா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசுகளை வழங்கி இயக்க உரை ஆற்றினார்.
ஜாக்டோ ஜியோ சார்பில் இம்மாதம் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் ஆசிரியர் நல அமைப்பின் சார்பில் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- தப்பி ஓடிய வாலிபர் ஆனந்தன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமம் ஆரணி ஆற்றில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது புதுப்பாளையம் ஆரணி ஆற்றின் அருகே ஒருவர் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்துகொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்கு சென்றபோது மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பனையஞ்சேரியைச் சேர்ந்த ஆனந்தன்(வயது35) என்ற வாலிபர் போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். எனவே, போலீசார் அங்கிருந்த 1,020 மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர் ஆனந்தனை வலை வீசி தேடி வருகின்றனர்.
- பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது.
- சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலி்ல் ஜாத்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது.
இதில் கடந்த 2-ந்தேதி மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது. அப்போது வான வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி (36) மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் ஏராளமான பட்டாசுகளை காலியான இடத்தில் வைத்திருந்தனர்.
அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை எடுத்து வெடித்த போது, அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறி விழுந்தது. இதில் அங்கிருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலிக்கு இடது கால் சிதைந்தது. ஊழியர் சஞ்சீவி உடல் முழுவதும் கருகினார்.
அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சாதிக்அலி மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சாதிக்அலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சஞ்சீவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சமூகவலைதளங்களின் பயன்பாடு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
- விதவிதமான புகைப்படம் வித்தியாசமான, வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலை தளங்கில் ஏராளமானோர் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
திருவள்ளூர்:
சமூகவலைதளங்களின் பயன்பாடு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
தாங்கள் பதிவிடும் புகைப்படம், வீடியோக்களை எத்தனை பேர் ரசிக்கிறார்கள். எத்தனை பேர் 'லைக்' போட்டு விரும்புகிறார்கள் என்பதை எதிர்பார்த்து தனிபட்டாளமே உள்ளது.
இதற்காக தினமும் விதவிதமான புகைப்படம் வித்தியாசமான, வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலை தளங்கில் ஏராளமானோர் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிருடன் பிடித்த பாம்பின் தலையை தனியாக கடித்து துப்பி வீடியோ எடுத்த 3 வாலிபர்கள் வனத்துறையினரின் பிடியில் சிக்கி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சூர்யா, சந்தோஷம் ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர் பாம்பு ஒன்றை பிடித்தார். சுமார் 3 அடி நீளமுள்ள அந்த பாம்பை மோகன் கையில் வைத்து விளையாடினார். பின்னர் அதன் தலையை வாயால் கடித்து துண்டிக்கப் போவ தவதாக கூறினார்.
திடீரென அவர் பாம்பின் தலையை தனது வாயால் கடித்து துப்பினார். பின்னர் பாம்பின் உடலை சாலையில் வீசினார். பாம்பின் தலை தனியாக கிடந்தது.
இந்த காட்சியை நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த வீடியோ தங்களது பேஸ்புக் வலை தளத்தில் பதிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரிகள், பாம்பின் தலையை வாலிபர் கடித்து துப்பும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக வனவிலங்குகளுக்கான குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் ஆற்காடு வன சரக அலுவலர் சரவணன் பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பாம்பை கடித்து துப்பி வீடியோ வெளியிட்டதாக மோகன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா, சந்தோஷம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது வன விலங்குகளை துன்புறுத்துதல், வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- விவசாய நில தகராறில் 75 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள பொம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது75). விவசாயி. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
பெரியசாமிக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அந்த வயல்பகுதிக்கு செல்லும் போது அருகில் உள்ள இடத்தை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியசாமி தன்னுடைய விவசாய நிலத்தில் பயிர் செய்வதற்காக ஏர்உழ சென்றார். அப்போதும் எதிர்தரப்பினர் வாக்கு வாதம் செய்ததாக தெரிகிறது. இதனால் பெரியசாமி மிகவும் மனவேதனை அடைந்தார்.
இதற்கிடையே வயல்பகுதிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்த ரத்தினம் என்பவரது வீட்டு முன்பு பெரியசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெரியசாமியின் சட்டை பாக்கெட்டில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனது சாவிற்கு காரணம் நான்கு நபர்கள் தான் என்று அவர்களது பெயர்களை குறிப்பிட்டு எழுதி வைத்து இருந்தார்.
பெரியசாமியின் உடல் பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய நில தகராறில் 75 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டுவெடியை நாய் கடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
- மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ளது வன்னிப்பாக்கம் கிராமம். இங்குள்ள தெரு நாய் ஒன்று அங்கு கிடந்த நாட்டு வெடியை கடித்தது. இதில் அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அந்த நாயின் வாய் கிழிந்து உயிருக்கு போராடிய படி கிடந்தது. இந்த நிலையில் அந்த நாய் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டுவெடியை நாய் கடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நாட்டு வெடியை வைத்தவர்கள் யார்? என்பது குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.
- செவ்வாய்க்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று விடியற்காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சிறுவாபுரி:
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும். சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலுக்கு 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று விடியற்காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால்,பொது தரிசனம்,ரூ.50, ரூ.100 கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் கடும் வெயிலையும் பொருட்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆனால், போதிய அளவு போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே,விசேஷ காலங்களில் அதிக அளவு போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட பொது கூட்டம்.
- அன்பு வாணன், சுப்பிரமணி, வல்லூர்தமிழரசன், கோளூர் கதிரவன், தமிழ் உதயன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே கோவிந்தராசன் தலைமையில் மீஞ்சூர் அடுத்த பட்ட மந்திரியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் திமுக நிர்வாகிகள் பகலவன் தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், சி.எச் சேகர், உமா மகேஸ்வரி, செல்வசேகரன் மணிபாலன், ருக்குமனி மோகன்ராஜ் அத்திபட்டு எம் டி ஜி கதிர்வேல், பா.செ.குணசேகரன், ஸ்டாலின், பாஸ்கர் சுந்தரம், வழக்கறிஞர் தேவேந்திரன், அன்பு வாணன், சுப்பிரமணி, வல்லூர்தமிழரசன், கோளூர் கதிரவன், தமிழ் உதயன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளியின் 35 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
- முன்னதாக பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், யோகா, கவிதை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் 35 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் பொன் தாமோதரன், பொன்னேரி நகர வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், யோகா, கவிதை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெள்ளகுளம் அடுத்த பி.என். கண்டிகை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் தாய் சரோஜம்மாவுடன்(68) கடையை திறக்க சென்றார்.
வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உற்சவர் முருகப்பெருமானுக்கு 250 பால்குட அபிஷேகம் நடந்தது.
- பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று விமரிசையாக நடை பெற்றது. இதைதொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில்காவடிகள் எடுத்தும், 250 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.
காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 250 பால்குட அபிஷேகம் நடந்தது.
மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரா தனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரம் விழாவையொட்டி மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலால், பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில் வளாகத்தில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.






