என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    லைக்கிற்கு ஆசைப்பட்டு பாம்பின் தலையை கடித்து துப்பிய வாலிபர்- சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் கைது
    X

    'லைக்'கிற்கு ஆசைப்பட்டு பாம்பின் தலையை கடித்து துப்பிய வாலிபர்- சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் கைது

    • சமூகவலைதளங்களின் பயன்பாடு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்து வருகிறது.
    • விதவிதமான புகைப்படம் வித்தியாசமான, வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலை தளங்கில் ஏராளமானோர் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சமூகவலைதளங்களின் பயன்பாடு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

    தாங்கள் பதிவிடும் புகைப்படம், வீடியோக்களை எத்தனை பேர் ரசிக்கிறார்கள். எத்தனை பேர் 'லைக்' போட்டு விரும்புகிறார்கள் என்பதை எதிர்பார்த்து தனிபட்டாளமே உள்ளது.

    இதற்காக தினமும் விதவிதமான புகைப்படம் வித்தியாசமான, வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலை தளங்கில் ஏராளமானோர் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிருடன் பிடித்த பாம்பின் தலையை தனியாக கடித்து துப்பி வீடியோ எடுத்த 3 வாலிபர்கள் வனத்துறையினரின் பிடியில் சிக்கி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான சூர்யா, சந்தோஷம் ஆகியோருடன் சேர்ந்து தண்ணீர் பாம்பு ஒன்றை பிடித்தார். சுமார் 3 அடி நீளமுள்ள அந்த பாம்பை மோகன் கையில் வைத்து விளையாடினார். பின்னர் அதன் தலையை வாயால் கடித்து துண்டிக்கப் போவ தவதாக கூறினார்.

    திடீரென அவர் பாம்பின் தலையை தனது வாயால் கடித்து துப்பினார். பின்னர் பாம்பின் உடலை சாலையில் வீசினார். பாம்பின் தலை தனியாக கிடந்தது.

    இந்த காட்சியை நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த வீடியோ தங்களது பேஸ்புக் வலை தளத்தில் பதிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரிகள், பாம்பின் தலையை வாலிபர் கடித்து துப்பும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக வனவிலங்குகளுக்கான குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் ஆற்காடு வன சரக அலுவலர் சரவணன் பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பாம்பை கடித்து துப்பி வீடியோ வெளியிட்டதாக மோகன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா, சந்தோஷம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது வன விலங்குகளை துன்புறுத்துதல், வனவிலங்குகளுக்கு மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×