கொள்ளையர்கள் நகை முயற்சி- மூதாட்டி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயம்

வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
கொள்ளையர்கள் நகை முயற்சி- மூதாட்டி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயம்
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெள்ளகுளம் அடுத்த பி.என். கண்டிகை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் தாய் சரோஜம்மாவுடன்(68) கடையை திறக்க சென்றார்.

வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com