என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய நில தகராறில் 75 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    விவசாய நில தகராறில் 75 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

    • விவசாய நில தகராறில் 75 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள பொம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது75). விவசாயி. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

    பெரியசாமிக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அந்த வயல்பகுதிக்கு செல்லும் போது அருகில் உள்ள இடத்தை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியசாமி தன்னுடைய விவசாய நிலத்தில் பயிர் செய்வதற்காக ஏர்உழ சென்றார். அப்போதும் எதிர்தரப்பினர் வாக்கு வாதம் செய்ததாக தெரிகிறது. இதனால் பெரியசாமி மிகவும் மனவேதனை அடைந்தார்.

    இதற்கிடையே வயல்பகுதிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்த ரத்தினம் என்பவரது வீட்டு முன்பு பெரியசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பெரியசாமியின் சட்டை பாக்கெட்டில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனது சாவிற்கு காரணம் நான்கு நபர்கள் தான் என்று அவர்களது பெயர்களை குறிப்பிட்டு எழுதி வைத்து இருந்தார்.

    பெரியசாமியின் உடல் பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாய நில தகராறில் 75 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×