என் மலர்
உள்ளூர் செய்திகள்
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா: தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தீர்மானம்
- சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் து.இளங்கோ படத்தை மாநிலத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்தார்.
- ஜாக்டோ ஜியோ சார்பில் 11-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது.
பெரியபாளையம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் எல்லாபுரம் வட்டார கிளை மற்றும் எல்லாபுரம் வட்டார ஆசிரியர் நல அமைப்பின் சார்பில் பெரியபாளையத்தில் உள்ள ஏ.டி.மஹால் திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் து.இளங்கோ படத்திறப்பு விழா, ஓய்வு பெற்ற எட்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிரியைகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,வட்டாரத் தலைவர் பொ.செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியர் நல அமைப்பின் வட்டாரத் தலைவர் த.பார்த்திபன், வட்டார பொருளாளர் து.ஆனந்தன், வட்டாரச் செயலாளர் இரா.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் மாநிலத்தலைவர் து.இளங்கோ படத்தை மாநிலத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்து இயக்கப்பேருரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பொதுச் செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி பொன்னாடை அணிவித்தார்.
மாநில பொருளாளர் சே.நீலகண்டன் நினைவு பரிசை வழங்கினார். வட்டார மற்றும் மாவட்ட செயலாளர் பா.ராஜாஜி மகளிர் தின விழா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசுகளை வழங்கி இயக்க உரை ஆற்றினார்.
ஜாக்டோ ஜியோ சார்பில் இம்மாதம் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் ஆசிரியர் நல அமைப்பின் சார்பில் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








