என் மலர்
திருப்பூர்
- கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை சோ்ந்த உரிமையாளா்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தொழில் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நாடா இல்லா தறி நெசவாளா் சங்க (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:- மின் கட்டண உயா்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தென்னை நாா் உற்பத்தி சாா்ந்த தொழிற்சாலைகள், நிட்டிங், ஓ.இ. மில்கள், ஸ்பின்னிங் மில்கள், கல்குவாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களை சோ்ந்த உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது.
இதில் மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.
- காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
- துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஆகஸ்ட் 30 -ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
ஊத்துக்குளி துணை மின் நிலையம்:- ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவி ந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுப்புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை.
- குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.
- பட்டியலின பெண் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்.
பெருமாநல்லூர்:
திருப்பூரில் அரசுப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில், பட்டியலினத்தைச் சோ்ந்த பெண் உணவு சமைத்ததால், அதனை சாப்பிட விடாமல் தடுத்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.
பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் சத்துணவு சமைக்கக் கூடாது என்றும், அவா் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் சிலா் பிரச்சினைகள் செய்வது ஏற்புடையதல்ல.
எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயோமெட்ரிக் ஆய்வை ஆகஸ்ட் 20 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மணிப்பூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்
திருப்பூர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூா் மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் கோப்பைத் தோட்டத்தில் உள்ள பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நூா்தீன் தலைமை வகித்தாா்.
இதில், மத்திய அரசின் சிறுபான்மை நலத் துறை சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் முறையில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயோமெட்ரிக் ஆய்வை ஆகஸ்ட் 20 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பெளத்த மாணவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மணிப்பூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடா்பான முன்னெடுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் யாசா் அராபத், பொருளாளா் சிராஜ்தீன், மாவட்ட துணைத் தலைவா் ஜாகிா் அப்பாஸ், துணைச் செயலாளா்கள் ஷேக் பரீத், ஷாஜகான், காஜா, ஜெய்லானி, ஹனீபா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
- மதுக்கடையை அகற்றக் கோரி டாஸ்மாக் மேலாளா், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.
- மதுக்கடையால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.
திருப்பூர்:
திருப்பூா் கொங்கு பிரதான சாலை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கடையால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.
மதுக்கடையை அகற்றக் கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளா், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா். ஆனால், இதுவரை டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்நிலையில், மதுக்கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மண்டலக்குழு செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் தலைமை வகித்தாா்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.
இதில் மாநகராட்சி துணை மேயரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினருமான பாலசுப்பிரமணியம், மாநகா் மாவட்ட குழு செயலாளா் ரவிசந்திரன், ஏஐடியூசி., மாவட்டத்தலைவா் மோகன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.
- காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
- முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாநகர நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
14 நகர சுகாதார செவிலியர்கள் பணியிடத்துக்கு பி.எஸ்சி.நர்சிங், நர்சிங் மிட்வைப் பயிற்சி, டிப்ளமோ நர்சிங் அன்ட் மிட்வைப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆய்வக அலுவலர், 1 மருத்துவ பணியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.
வருகிற 11-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேர்காணலுக்கு வருபவர்களிடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல் சரிபார்க்கப்படும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
- ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துபட்டியை சேர்ந்தவர் டேவிட்ராஜ்-ரூபிஜெனிபர். இந்த தம்பதியின் மகள் ஜோஸ்லின் ஹெனியா (வயது 14). டேவிட்ராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூர் செரங்காட்டில் குடியிருந்து வருகிறார்.
இவருடைய மகள் ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி கழிவறைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி காயம் அடைந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் கழுத்து, கை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மேயர் தினேஷ்குமார் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி அந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
- திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
- தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூா் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து பல அடி தொலைவுக்கு கரும்புகை எழுந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவா்கள் திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், எந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரக்கன்றுகள் நடும் விழாவில் மொத்தம் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன.
- காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் 22 ஆயிரத்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக காங்கயம் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது துளிகள் அமைப்பு நிர்வாகிகள், ஸ்ரீவராஹி ரியலிட்டி குரூப் (எஸ்.வி.ஆர்.குரூப்) நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில் 175 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஸ்ரீவராஹி கேட்டேட் டவுன்சிப் குடும்ப உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
- மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.
காங்கயம்,
நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.
அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.
எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
- மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.
- 21 நாட்களுக்கு பின் கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
உடுமலை:
உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு உள்ளது. அதில், தற்போது மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.
இது குறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவி, அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. உன்னி மற்றும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது.
நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும்.சிறு கன்றுகள் முதல் கறவை மாடுகள் வரை பாதிக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.பண்ணைகளை சுற்றிலும் நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.
அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். 21 நாட்களுக்கு பின், கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.கால்நடைகளுக்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ள, கால்நடை வளர்ப்போர் முன்வர வேண்டும் என்றனர்.
- ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
- கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
திருப்பூர்:
திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் சார்பில் தொழில் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.
எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், எம்ப்ராய்டரி நிறுவனங்களின் பிரச்னைகளை கவனத்தில் கொள்வோம். விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள்வோம் என்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தொழில்துறை ஆலோசகர் ராஜா ராமசுந்தரம் பேசினார். தொடர்ந்து, எம்ப்ராய்டரி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-
ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்ற போதும் கடந்த 15 ஆண்டுகளாக எம்ப்ராய்டரி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.போதுமான ஆர்டர்கள் இல்லாதது, தொழிலாளர் பற்றாக்குறை, போதுமான எம்ப்ராய்டரி கட்டணங்கள் கிடைக்க பெறாதது போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.இனிவரும் காலங்களில் எம்ப்ராய்டரி கட்டணத்தை பீஸ் ரேட் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.






