என் மலர்
திருப்பூர்
- 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.
திருப்பூர்:
தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரி கே.ஜி.முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, புத்தகம் வாங்க உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகையை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
- மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் சிதம்பரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
- பள்ளியின் முதல்வா் சின்னையா, துணை முதல்வா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோா் பாராட்டினா்.
திருப்பூர்:
இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் சிதம்பரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 10 ம் வகுப்பு மாணவி தியாஸ்ரீ வெற்றி பெற்று தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். அதேபோல, கே.பி.ஆா். கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 9 ம் வகுப்பு மாணவி திவ்யா வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வா் சின்னையா, துணை முதல்வா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோா் பாராட்டினா்.
- இனிப்பு வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
- தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமிக்க இனிப்பு வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.அதில் தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது:-
இனிப்பு கார வகைகள், பேக்கரி பொருட்களை, தரமான மூலப்பொருட்கள் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்படம், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக நிறமிகள், கார வகைகளில் நிறமிகளை பயன்படுத்தக்கூடாது.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சூடான பொருட்களை பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடி வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக நிறமிகள் பயன்படுத்தினால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும். எண்ணெய், நெய் மற்றும் மூலப்பொருட்களின் விபரங்கள் முழுமையாக அதன் கொள்முதல் கேன்கள், டின் லேபிளில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.பால், பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளை தனியாக வைக்க வேண்டும். பயன்படுத்தும் கால அளவை அச்சிட்டிருக்க வேண்டும்.இனிப்புகளில் பூஞ்சை தொற்று வராதவாறு, பாதுகாக்க வேண்டும். இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் பலகார சீட்டு நடத்துபவர்கள் அனைவரும் துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் துறையின் பாஸ்டாக் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
- முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.
திருப்பூர்:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவா் சஞ்சய் பேசியதாவது:-
ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும். மனமும், உடலும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றையும் பாதிக்கும்.
போதைப்பொருள்கள் பயன்படுத்துவது, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. மக்களிடம் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டவா் குறித்த விவரங்கள் தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கும், மனச்சோா்வு உள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து 14416 என்ற எண்ணிற்கும் தகவல் தர வேண்டும் என்றாா்.பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, தினேஷ்கண்ணன், சிரஞ்சீவி, சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்களுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உதவுவேன், மனநலம் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.
- அலகுமலை, பூமலூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாரள் தெரிவித்தார்.
திருப்பூர்
தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன், சோமனூர் வட்டார செயற்பொறியாளர் சபரிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பூர் அலகுமலை, பூமலூர் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான் வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி, மங்கலம், சுல்தான்பேட்டை,இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம்,செட்டிப்பாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிப்பாளையம், சின்னப்புத்தூர், பெரியப்புத்தூர், வேட்டுவபாளையம், மலைக்கோவில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிப்பாளையம், புக்கிலிபாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூர், கணக்கம்பாளையம், பெருமாபாளையம், பள்ளிபாளையம், கிடாத்துரைபுதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
- கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
திருப்பூர்:
திருப்பூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி நாளை 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தப்பயிற்சியில் பங்கேற்று கறவை மாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421- 2248524 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
- கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மங்கலம்:
கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் தன் சுத்தம் பேணுதல் மற்றும் மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சனமாலை ,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கோகிலாமணி நன்றி கூறினார்.
- பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
- தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காங்கயம்:
மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை கண்டறிந்து அதனை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் தாராபுரம் மெயின் ரோடு பகுதியான ேபாலீஸ் நிலையம், பஞ்சாயத்து யூனியன், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபாரம் நிறுவனங்கள் பகுதிகளை உள்ளடக்கிய களிமேடு எனும் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறவில்லை. சில காரணங்களை காட்டி காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் பாதசாரிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் உடனடியாக களிமேடு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இல்ைலயெனில் கோரிக்கை நிறைவேறும் வரை காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட 2 முக்கிய இடங்களின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அமைச்சர், மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு களிமேடு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து போட்டோவுடன் மாலைமலரில் செய்தியும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.
- உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் மிகவும் பிரபலமானது தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை. இங்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் வகையில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகிறது. இச்சந்தைக்கு பல்லடம், பொங்கலூர், கொடுவாய், கோவில்வழி, ஊத்துக்குளி, அவினாசி போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதனால் திருப்பூர் மாநகர மக்களின் அன்றாட தேவையை இந்த உழவர் சந்தை பூர்த்தி செய்து வருகிறது.
மேலும் திருப்பூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிறு மளிகை கடைக்காரர்கள் மற்றும் மொத்த காய்கறி கடைக்காரர்கள் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் உள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து வருவது வழக்கம். தற்போது திருப்பூர் பழைய பஸ் நிலையம் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் வரை சாலையோர கடைகள் பெருகிவிட்டது. இதனால் அவசர அவசரமாக வரும் வியாபாரிகள் சாலையோர கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி பழங்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதிப்பதாக விவசாயிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினர். அதாவது சாலையோரம் உள்ள கடைகளை மாநகராட்சி மூலம் அகற்றினர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சாலையோர கடைகள் புற்றீசல் போல வரும். இப்படியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் உழவர் சந்தையில் தக்காளி வாங்குவதற்காக உள்ளே செல்லும் போது மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்த முன் பக்க நுழைவு வாயிலில் கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கு வசூல் செய்யும் கட்டண அதிகாரிகள் தான் ெபாறுப்பாகிறார்கள். அத்துடன் பார்க்கிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது ஒவ்வொரு முறையாக கொள்முதல் செய்யும் தக்காளிகளை கொண்டு வந்து வைத்து விட்டு பின்னர் திரும்ப வாங்க செல்வது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளியை ஒரு பையில் வாங்கி வைத்து விட்டு செல்வார்கள்.
இந்தநிலையில் திருடுவதற்காக ஒரு கும்பல செயல்படுகிறது. காய்கறிகளை வைத்து விட்டு செல்வதை நோட்டமிடும் கும்பல்,அவர்கள் திரும்ப வருவதற்குள் காய்கறிகளை அலேக்காக பையுடன் தூக்கி செல்கிறார்கள். அதுமட்டும் இன்றி சாக்கு மூட்டையில் காய்கறி வாங்கி வைத்திருந்தாலும் அதற்கும் உத்தரவாதம் கிடையாது. இது அருகில் வண்டியை நிறுத்துபவர்களுக்கும் தெரிவது இல்லை. இதனால் திருடர்களுக்கு தக்காளி திருடுவது கைவந்த கலையாக அமைந்து விடுகிறது. மேலும் நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்பவர்களுக்கும் இதுபற்றி தெரிவது இல்லை. கண்காணிப்பு கேமராவும் இல்லை. பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த உழவர் சந்தையில் பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியிலும் இதே சூழ்நிலை தான். கடந்த சில நாட்களுக்கு முன் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிள் அதிகாலை 2.30 மணி அளவில் திருட்டு போனது. பின்னர் போலீசாரால் அது மடக்கி பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. ஆகவே உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசார் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.மேலும் மாநகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு பொருட்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- துறை ரீதியான அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக்கூறினார்கள்.
உடுமலை :
உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் ஜோதி, வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது 23 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து துறை ரீதியான அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக்கூறினார்கள். அப்போது கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை, சின்ன வீரம்பட்டி இந்திராநகர் இணைப்பு சாலை பணியை விரைவுப்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்துதல், சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும், 100 நாள் சம்பளத்தை தடையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினார்கள்.
- நாள்தோறும் ஏராளமான போட்டி தேர்வர்கள் வருகை தந்து குறிப்பு எடுத்து தயாராகி வருகின்றனர்.
- போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும்.
உடுமலை:
உடுமலை குட்டை திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது .இங்கு போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் பொது அறிவு, நடப்பு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் ஏராளமான போட்டி தேர்வர்கள் வருகை தந்து குறிப்பு எடுத்து தயாராகி வருகின்றனர். ஆனால் போட்டி தேர்வு புத்தகங்கள் பற்றாக்குறை, செய்தித்தாள்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் முழுமூச்சில் தேர்வுக்கு தயாராக இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மக்களுக்கு சேவையாற்ற அரசுப்பணியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தோடு முழுமூச்சாக தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களே உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றால் பல்வேறு தலைப்புகளில் 5 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்க வேண்டும். புத்தகங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேர்வில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதுமட்டுமின்றி நாராயணகவி வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் சொற்ப அளவில் மட்டுமே உள்ளது. அதையும் அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகங்கள் முற்றிலுமாக இல்லை. அதுமட்டுமின்றி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். எனவே நாராயணகவி மணிமண்டபத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதே போன்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று செல்லும் தேர்வர்கள் புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவ வேண்டும். இதனால் இளைய தலைமுறையினர் பயன் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
- திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறுகடன் திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கு டாம்கோ திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.
மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை - முதுகலை தொழிற்கல்வி - தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.அதன் அடிப்படையில் டாம்கோ திட்டங்களின் பயனை சிறுபான்மையின மக்கள் முழுமையாக அடைய கீழ்க்காணும் இடங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது.
25-ந்தேதி திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி, 26-ந்தேதி தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, 27-ந்தேதி உடுமலை நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 5மணி வரை நடைபெறும்.
இம்முகாமில் புதியதொழில் மேற்கொள்ளவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் சிறுபான்மையினருக்கு கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000 நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார்கார்டு, செல்லத்தக்க வருமானச் சான்று, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்டதொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மை சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com - ஐ தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.






