search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் சிக்கண்ணா அரசு   கல்லூரியில்  உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம்
    X

    உலக மனநல தின விழிப்புணர்வு  கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி. 

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
    • முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவா் சஞ்சய் பேசியதாவது:-

    ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும். மனமும், உடலும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றையும் பாதிக்கும்.

    போதைப்பொருள்கள் பயன்படுத்துவது, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. மக்களிடம் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டது.

    மனநலம் பாதிக்கப்பட்டவா் குறித்த விவரங்கள் தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கும், மனச்சோா்வு உள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து 14416 என்ற எண்ணிற்கும் தகவல் தர வேண்டும் என்றாா்.பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, தினேஷ்கண்ணன், சிரஞ்சீவி, சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்களுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உதவுவேன், மனநலம் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.

    Next Story
    ×