search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational scholarship"

    • 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும்.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    திருப்பூர்:

    தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் பிரி கே.ஜி.முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, புத்தகம் வாங்க உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இந்த உதவித்தொகையை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்ட போயர் சமுதாயம் நலசங்கம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது
    • நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்ட போயர் சமுதாயம் நலசங்கம் சார்பில் 10-ம்வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2-ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் விழா தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது.

    இந்த விழாவில் சென்னை போயர் சமுதாய தொழிலதிபர் கூட்டமைப்பின் தலைவர் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர் முருகன், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் பிரபாகரன், பிரபு, ராமசாமி, ராஜேஷ், லட்சுமணன், சிவராமன், ராம்செந்தில் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் மகன்-மகள்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேனி:

    பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2018-19-ம் கல்வியாண்டிற்கான தொழிற்முறை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகள் படிக்கும் முன்னாள் படை வீரர்களின் மகன்- மகள்களுக்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திட ஏதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதள முகவரியில் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஓராண்டிற்கு ரூ.25000 மற்றும் மாணவிகளுக்கு ரூ.27 ஆயிரம் வழங்கப்படும். எனவே பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2018-19-ம் கல்வியாண்டிற்கான தொழிற்முறை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகள் முதலாம் ஆண்டில் படிக்கும் முன்னாள் படை வீரர்களின் மகன்-மகள்களுக்கு, கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், முன்னாள் படை வீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இந்த விண்ணப்பங்களை வருகின்ற நவம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை முகாமின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை முகாமின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. அவர், முகாமை தொடங்கி வைத்து கல்வி கடனிற்கான விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது:- சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் இதர பிரிவினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை சிறுபான்மையின சமுதாய மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் சிறுபான்மையின மக்கள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் கல்விக்கடன் திட்டம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் வங்கிகளில் இருந்து பெற்ற கல்வி உதவித் தொகையை நல்ல முறையில் திரும்பி செலுத்த வேண்டும். தங்களுக்கு தெரிந்த தகவல்களை உடன் படிக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். சிறுபான்மையின சமூக மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கல்வித்தரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தி சமூகத்தில் முன்னேற பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன்கருதி உயர் கல்வி உதவித் தொகைக்கான கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPannerselvam #TNAssembly #ADMK
    சென்னை:

    சட்டசபையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கணேசன் (திட்டக்குடி தொகுதி) பேசினார். அப்போது அவர், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜலட்சுமி, ‘பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம்தான் இந்தத் திட்டம். 2017-2018-ம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய பராமரிப்பு உதவித்தொகையும், கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய நிர்வாகக் கட்டணமும் தவிர, மற்ற அனைத்து உதவித்தொகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ரூ.850 கோடியை விடுவித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை முடிவுற்ற பின்பு, கல்வி உதவிக்கான கேட்பு கணக்கிடப்பட்டு, அதற்கான உதவித்தொகையையும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, மாநில அரசின் பொறுப்புத் தொகை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் மொத்த கேட்பு 2018-2019-ம் ஆண்டிற்கு அதற்கு மேல் உயர வாய்ப்பில்லை.

    இந்தநிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் இனிமேல் மாநில அரசு, அதன் நிதி ஆதாரத்தில் இருந்தே வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி, இந்த நிதிச் சுமையை மாநில அரசே தொடர்ந்து ஏற்று செயல்படுத்தும்.

    அதே நேரத்தில், மற்ற மத்திய அரசின் திட்டங்களைப்போல், நிதிப்பகிர்வில் மத்திய அரசின் நிதி 60 சதவீதம், மாநில அரசின் நிதி 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “வெலிங்டன் ஏரியை பராமரிக்க ரூ.36 கோடியே 45 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில், ஏரி பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என்றார். #OPannerselvam #TNAssembly #ADMK
    ×