என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு சொந்த நிதியில் கல்வி உதவித் தொகை வழங்கிய விஜய் வசந்த் எம்.பி
    X

    பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு சொந்த நிதியில் கல்வி உதவித் தொகை வழங்கிய விஜய் வசந்த் எம்.பி

    • பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த்.
    • தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பங்கேற்றார்.

    சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் குழந்தைகளுக்கு எம்.பி. விஜய் வசந்த் சொந்த நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கினார்.

    தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நேற்று சென்னையில் ஊடகங்களின் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும், பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் கல்வித் திருவிழாவை சென்னை சேத்துப்பட்டு தனியார் பூங்கா வளாகத்தில் நடந்தியது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, தனது சொந்த நிதியிலிருந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

    மேலும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகப்பை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய எம்பி விஜய் வசந்த், அவர்களை ஊக்குவித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய விருது பெற்றுள்ள "பார்க்கிங்" திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பத்திரிகைககள், ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

    விழாவில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நிகழ்த்தப்பட்டது. மேஜிக் ஷோவில் பள்ளி குழந்தைகளும், பெற்றோர்கள் சிலரும் பங்கேற்றனர்.

    ஏர்டெல் சூப்பர் ஜூனியர் புகழ் ஹர்ஷினி தனது இனிமையான குரலில் பல திரைப்பட பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தார்.

    நிகழ்ச்சி முடிந்த பிறகு எம்பி விஜய் வசந்த் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.

    Next Story
    ×