என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali snacks ticket"

    • இனிப்பு வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்
    • தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் : 

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமிக்க இனிப்பு வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.அதில் தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது:-

    இனிப்பு கார வகைகள், பேக்கரி பொருட்களை, தரமான மூலப்பொருட்கள் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்படம், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக நிறமிகள், கார வகைகளில் நிறமிகளை பயன்படுத்தக்கூடாது.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சூடான பொருட்களை பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடி வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக நிறமிகள் பயன்படுத்தினால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும். எண்ணெய், நெய் மற்றும் மூலப்பொருட்களின் விபரங்கள் முழுமையாக அதன் கொள்முதல் கேன்கள், டின் லேபிளில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.பால், பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளை தனியாக வைக்க வேண்டும். பயன்படுத்தும் கால அளவை அச்சிட்டிருக்க வேண்டும்.இனிப்புகளில் பூஞ்சை தொற்று வராதவாறு, பாதுகாக்க வேண்டும். இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் பலகார சீட்டு நடத்துபவர்கள் அனைவரும் துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் துறையின் பாஸ்டாக் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×