என் மலர்
திருப்பத்தூர்
- நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற சார்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் முள்வேலி அமைத்து முருங்கை நர்சரி கார்டன் அமைக்க சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் சின்டெக்ஸ் தொட்டியை உடைத்து குடிநீர் பைப்பையும் சேதப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் இணைப்பு பைப் லைன் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னதோட்டலாம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிரி (வயது 52).
இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை செய்து வந்தார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கிரி வளத்தூர் குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கோயம்புத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவம் இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக கிரி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சி. பாபு தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கலைவாணன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர் சங்கர் எம் சிவக்குமார் ஸ்ரீ அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில பொறுப்பாளர் ஜே.மாத்தேயு, தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரசின் குழுநில மன்னர்களை வைத்து வரி வசூல் செய்வதை போல சில வட்டார கல்வி அலுவலர்களை வைத்து வசூல் செய்யும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க) கண்டித்தும் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என் ஞானசேகரன் மாவட்ட செயலாளர் சினிவாசன், ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு பரசுராமன் ஒன்றிய தலைவர்கள் ரமேஷ் சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இரவு புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
- பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜை நடைபெற்று அதன் பின்னர் சுவாமி தரிசனம் தொடங்க உள்ளது. மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் அஸ்திர தேவர் மற்றும் அங்குச தேவருக்கு தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன்பு புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும். இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை குடிதண்ணீர், உணவு, சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் வீதியை சுற்றி வந்து சண்முகநாதபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது
- 88 பேர் பயனடைந்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஜோலார்பேட்டை வட்டார மருத் துவமனை இணைந்து தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் முகாம் நடை பெற்றது. ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ராமலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார்.
ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, பொன்னேரி, குன்னத் தூர், மண்டலவாடி, திரியாலம், உள்ளிட்ட ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட88 நபர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டதுணை இயக்குனர் செந்தில் பராமரிப்பு பெட்டகம் வழங்கி சிறப்பு ரையாற்றினார்.
சுகாதார ஆய்வாளர்கள் கோபி, புகழேந்தி, தமிழ்வாணன், சுந்தரபாண்டியன் மற்றும் சுகாதார பணியா ளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகிஷ் ணன் நன்றி கூறினார்.
- ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாயன் (வயது 50).கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு மின்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாயன் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட மாயன் சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மாயன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
- வருகிற 15-ந் தேதி நடக்கிறது
- பதிவு செய்ய இன்று கடைசி நாள்
ஜோலார்பேட்டை:
மாநில அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் பங்கேற்க திருப்பத்தூர் மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அணியில் விளையாட கபடி வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளது.
மேலும் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் எஸ்.பி. சீனிவாசன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி குழுக்கள் மற்றும் வீரர்கள் வரும் 15 ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகப்மியம்பட்டு விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான (சீனியர்) கபடிசாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் அனைத்து கபடி குழுக்கள் 15 ம் காலை 8.00 மணிக்குள் வரவேண்டும். மேலும் 8.30 மணிக்கு போட்டி துவங்கும்.
மேலும் இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு மாவட்ட பொறுப்பில், திருப்பத்தூர் மாவட்ட அணியில் விளையாட அழைத்து செல்லப்படுவார்கள்.
மேலும் போட்டியில் பங்குபெறும் வீரர்களின் தகுதிகளாக 85 கிலோவிற்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு இல்லை. மேலும் போட்டிகள் செயற்கை ஆடுகளத்தில் நடைபெறும். போட்டி முன் பதிவு செய்ய கடைசி நாளாக 13.04.2023 இன்று மாலை 6 மணி வரை ஆகும்.
மேலும் போட்டியில் பங்கேற்க உள்ள கபடி அணிகள் கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொலைபேசி எண்கள் 9791831708, 6374518933, 9677896387 ஆகும். மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கபடி வீரர்கள் தங்களது அணிகளை பதிவு செய்து போட்டியில் பங்கேற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மரங்கள் எரிந்து நாசம்
- கண்காணிப்பு பணி தீவிரம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குளித்திகை பகுதியில் சாணாங்குப்பம காப்புக் காடுகள் உள்ளன.
இந்த வனப் பகுதியில் கூளியம்மன் கோயில் வழிச்சாரகம் காட்டுப் பகுதியில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் திடீரென வனப்பகுதியில் தீ பிடித்து எரிந்தது.
பின்னர் வனப் பகுதியில் மளமளவென தீ பரவியது.இது குறித்து பொதுமக்கள் ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டில் தீ பரவிய பகுதிக்கு ஆம்பூர் வனச்சரகர் சங்கரய்யா தலைமையில் வனவர் சம்பத்குமார் வனக் காப்பாளர்கள் செந்தில் நல்லதம்பி பால்ராஜ் முனிசாமி ஆகியோர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் இன்று காலை வரை 2 நாள் போராட்டத்துக்கு பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீண்டும் வனப் பகுதியில் தீ பரவாமல் தடுக்க வனத் துறையினர் தற்போது அங்கேயே முகாமிட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வாலிபர் கைது
- ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் எஸ்.பி. கட்டுப்பாட்டு அறைக்கு மின்னூர் ஊராட்சி எம்.சி.ரோட்டு சேர்ந்த பொதுமக்கள் வாலிபர் ஒருவர் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசில்சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மின்னூர் எம்.சி.ரோட்டில் வசிக்கும் சுகன் என்கிற பப்லு வயது (22) என்பவர் பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. பின்னர் பப்லுவை பிடித்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
- எருது விடும் விழா நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இதற்கு முன்னதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை எருது விடும் விழா நடத்தப்பட்டது.
முன்னதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் க. குமார் தலைமையில் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்றனர். விழாவில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 250 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன.
குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு முதல் 55 பரிசுகள் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர்.
இதில் காளைகள் முட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழாவில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் என போலீசார் சுமார் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வருவாய் துறை, சுகாதார த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியை சேர்ந்த முஜிமில் அகமது (வயது 35). இவர் உமராபாத் அருகிலுள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சான்றோர் குப்பம் தனியார் பள்ளி அருகே வந்த போது குடியாத்தம் தனியார் கல்லூரியின் பஸ் இவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முஜிமில் அகமது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுக்கா மாடப்பள்ளி ஊராட்சி அருகே உள்ள களரூர் கிராமத்தில் இரண்டு நாள் மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம். கண்ணன், பி. ராமகிருஷ்ணன் ஆர்.கர்ணன் ஆர்..கோவிந்தராஜ் கே.பாலாஜி திருமலைவாசன் தலைமை வகித்தனர். கபடி போட்டியை ஏ.நல்லதம்பி எம்எல்ஏ வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார், கபடி போட்டி 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு மோதின.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ 25 ஆயிரத்து 70, இரண்டாவது பரிசு ரூ 20 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ15 ஆயிரம் உட்பட 5 பரிசுகளை திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சி. கார்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், பஞ்சாட்சரம் பெருமாள் குணசேகரன் சிவக்குமார் மன்னன் விஜயா சின்னத்தாய், வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கே கோமதி கார்த்திகேயன் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, முன்னாள் கவுன்சிலர் சிவலிங்கம், ராமச்சந்திரன், கூட்டுறவு துணைத் தலைவர் சாமிக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.






