என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீறிப்பாய்ந்து ஓடிய காளை.
நாட்டறம்பள்ளி அருகே காளை முட்டி 10 பேர் படுகாயம்
- எருது விடும் விழா நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இதற்கு முன்னதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை எருது விடும் விழா நடத்தப்பட்டது.
முன்னதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் க. குமார் தலைமையில் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்றனர். விழாவில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 250 க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன.
குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு முதல் 55 பரிசுகள் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர்.
இதில் காளைகள் முட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விழாவில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் என போலீசார் சுமார் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வருவாய் துறை, சுகாதார த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






