என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்"
- ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வர்பாபு வரவேற்றார். மாநில துணை தலைவர் நரசிம்மன், முன்னாள் மாநில தலைவர் சென்னப்பன், முன்னாள் மாநில சட்ட செயலாளர் நந்தகுமார், முன்னாள்மாவட்ட செயலாளர் அமர்நாத், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர்சி றப்புரையாற்றினார்கள்.
மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பிரபாகரன், மாவட்ட சட்ட செயலாளர் திம்மப்பா,செய்தி தொடர்பு செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் ஜெயராமன், வெங்கடாசலம், பரந்தராமன், இணை செயலாளர்கள் சின்னசாமி, ஜெயசந்திரன், ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளை வழங்க கூடாது. ஜூலை 1-ந் தேதியில் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டள்ள இ.எல். சரண்டர் ஐ ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சி. பாபு தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கலைவாணன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர் சங்கர் எம் சிவக்குமார் ஸ்ரீ அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில பொறுப்பாளர் ஜே.மாத்தேயு, தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரசின் குழுநில மன்னர்களை வைத்து வரி வசூல் செய்வதை போல சில வட்டார கல்வி அலுவலர்களை வைத்து வசூல் செய்யும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க) கண்டித்தும் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என் ஞானசேகரன் மாவட்ட செயலாளர் சினிவாசன், ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு பரசுராமன் ஒன்றிய தலைவர்கள் ரமேஷ் சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பரமத்தி ஒன்றியத்தில் தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பணி மூப்பின் படி பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வரை அங்கிருந்த அவர்கள், பின்னர் சென்னை நுங்கம்பாக்கம் சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டாலும், அதை சாப்பிடாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர்.
இதுகுறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆளுங்கட்சியினர் ஆட்சி முடிந்த பிறகு நாட்டில் நடமாட வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை’ என்றார்.

அதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவுடன், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவை சேர்ந்த 10 நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், ‘ஒரு நபர் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் வரை எங்களால் எதுவும் சொல்ல முடியாது. எனவே வருகிற 7-ந் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வையுங்கள்’ என தெரிவித்தார். இதில் இடைநிலை ஆசிரியர்களின் நிர்வாகிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அங்கிருந்து அவர்கள் திரும்பி வந்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ராபர்ட், கி.கண்ணன் கூறுகையில், ‘அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
எனவே எங்களுடைய நியாயமான முடிவு எட்டப்படும் வரை போராட்டத்தை தொடரும் நிலைக்கு அரசு தள்ளி இருக்கிறது’ என்று தெரிவித்தனர். #Stalin #TTVDinakaran #Thirumavalavan
காரைக்கால்:
காரைக்கால் பழைய ரயிலடி அருகே நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாளன், பொதுச் செயலாளர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் விஜயராகவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், காரைக்காலில் பணியாற்றும் புதுச்சேரி பகுதி பட்டதாரி ஆசிரியர்களிடம் ஜூன் மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், மே மாதம் வழங்க வேண்டிய பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும்.
காரைக்கால் பகுதியில் காலியாகவுள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் ஆகிய 113 பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், காரைக்கால் கல்வித்துறையில் உள்ள இரு நிர்வாக பதவிகளான தலைமை கல்வி அதிகார மற்றும் இணை இயக்குனர் பதவிகளில் ஒன்றினை தலைமை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, சங்க பொதுச் செயலாளர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் சங்க பொருளாளர் சிங்காரவேலு நன்றி கூறினார். #Teacherstruggle






