ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

திருப்பத்தூர்:

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.சி. பாபு தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கலைவாணன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர் சங்கர் எம் சிவக்குமார் ஸ்ரீ அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில பொறுப்பாளர் ஜே.மாத்தேயு, தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அரசின் குழுநில மன்னர்களை வைத்து வரி வசூல் செய்வதை போல சில வட்டார கல்வி அலுவலர்களை வைத்து வசூல் செய்யும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க) கண்டித்தும் கல்வித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என் ஞானசேகரன் மாவட்ட செயலாளர் சினிவாசன், ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு பரசுராமன் ஒன்றிய தலைவர்கள் ரமேஷ் சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com