என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி போட்டியில் பங்கேற்க வீரர்கள்"

    • வருகிற 15-ந் தேதி நடக்கிறது
    • பதிவு செய்ய இன்று கடைசி நாள்

    ஜோலார்பேட்டை:

    மாநில அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் பங்கேற்க திருப்பத்தூர் மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அணியில் விளையாட கபடி வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளது.

    மேலும் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் எஸ்.பி. சீனிவாசன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி குழுக்கள் மற்றும் வீரர்கள் வரும் 15 ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகப்மியம்பட்டு விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான (சீனியர்) கபடிசாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ளும் அனைத்து கபடி குழுக்கள் 15 ம் காலை 8.00 மணிக்குள் வரவேண்டும். மேலும் 8.30 மணிக்கு போட்டி துவங்கும்.

    மேலும் இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு மாவட்ட பொறுப்பில், திருப்பத்தூர் மாவட்ட அணியில் விளையாட அழைத்து செல்லப்படுவார்கள்.

    மேலும் போட்டியில் பங்குபெறும் வீரர்களின் தகுதிகளாக 85 கிலோவிற்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு இல்லை. மேலும் போட்டிகள் செயற்கை ஆடுகளத்தில் நடைபெறும். போட்டி முன் பதிவு செய்ய கடைசி நாளாக 13.04.2023 இன்று மாலை 6 மணி வரை ஆகும்.

    மேலும் போட்டியில் பங்கேற்க உள்ள கபடி அணிகள் கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தொலைபேசி எண்கள் 9791831708, 6374518933, 9677896387 ஆகும். மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கபடி வீரர்கள் தங்களது அணிகளை பதிவு செய்து போட்டியில் பங்கேற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×