என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 600 போலீசார் பாதுகாப்பு
    • ஊர்வலம் அமைதியாக நடத்திட ஆலோசனை

    ஆம்பூர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள முருகன் சினிமா தியேட்டர் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் செல்லும் பாதையை திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் உட்பட போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

    ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 7 டிஎஸ்பிகள் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். ஊர்வலம் அமைதியாக நடத்திட ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    மேலும் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் ஊர்வல பாதை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் ஆம்பூர் நகரம் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

    • திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஹீல்ஸில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் டி டி. குமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், துணைச் செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், அனைவரையும் வார்டு செயலாளர் பட்டாசு குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் படிவம் வழங்கி முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளர் கே. சி. வீரமணி பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், தம்பாகிருஷ்ணன், கந்திலி ஆர்.ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில்நுட்பச் செயலாளர் ஆர்.நாகேந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரா.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி டி..எம்.ரவி, சந்திரமோகன், அழகிரி; மதன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் அவைத் தலைவர் ஜி.ரங்கநாதன் நன்றி கூறினார்.

    • ரூ.20 லட்சத்தில் மகன்கள் கட்டினர்
    • 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 70).

    இவரது மனைவி இந்திராணி இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகழ்கள் உள்ளனர். நீலகண்டன் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார்.

    பெண் கல்வியை ஊக்குவித்து பல பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அப்பகுதி மக்களிடையே பேரன்பை பெற்றிருந்தார்.

    மேலும் தனது 3 மகன்களான ரமேஷ், ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரை நல்ல முறையில் படிக்க வைத்து இன்று வெளிநாட்டில் பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

    இந்நிலையில் நீலகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவரது மகன்கள் அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினர் பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி விருந்து அளித்தனர். மேலும் சுமார் 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

    இதுகுறித்து அவரது மகன்கள் கூறுகையில்:-

    எங்களுடைய தந்தை எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கினார். அப்பா செய்ததில் நாங்கள் சிறிது கூட அவருக்காக எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அப்பா அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என அவ்வபோது கூறி வருவார்.

    அதன் காரணமாக அவருடைய நினைவு நாளில் தங்களால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

    • 6 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    கர்நாடகா மாநிலம் கே.ஜி. எப்.சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் யாரப்பாபா (வயது 28), முஜாகிர் (28), ஜீனைத் (29), சுகேவ் (30), ஷாப் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதிக்கு காரில் வந்தனர்.

    அப்போது நாட்டறம்பள் ளியை அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27) நேற்று காலை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது காரில் வந்தவர்களில் 2 பேர் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த சீனிவாசனின் பைக்கை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    இதைக் கண்ட சீனிவாசன் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற இருவரும் அதி வேகமாக சென்றதால் நாட்ட றம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் அருகே கீழே விழுந்தனர்.

    அக்கம்பக்கத்தி னர் ஓடி வந்து இருவரையும் பிடித்தனர். அதேபோல் காரில் தப்ப முயன்ற 4 பேரும் பிடிபட்டனர். பிடி பட்ட 6 பேரையும் அருகி லுள்ள நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    போலீசார் காரை பரிசோ தனை செய்ததில் கத்தி, மடிக்கணினி, டேப், புளுடூத், துப்பாக்கிவடிவிலான லைட் டர் மற்றும் 8 போன்கள் உள் ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் பிடிபட்டவர்க ளையும், பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களையும் அங்கு ஒப்படைத்தனர். இது தொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் நாகராஜன் வழக்குப் டார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பத் தூர் மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் இவர்கள் எதற்காக காரில் பயங்கர ஆயுதங்களை கொண்டு வந்தனர் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • டயர் வெடித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் இவரது மகன் கருணாநிதி (வயது 30) சமையல் மாஸ்டர். இவர் நேற்று இரவு தனது பைக்கில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் திடீரென முன்பக்க டயர் வெடித்தது.

    இதனால் கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற கருணாநிதி அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு
    • தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்க வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம், காவலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிக ளிலும், கிராம பகுதியிலும் அடிக்கடி தீ விபத்து நடைபெறு கின்றது. காட்டுப்பகுதிகளில் மர்ம கும்பல் தீவைப்பு சம்ப வங்களும் நடைபெறுகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு ஆலங்காயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமையில் ஆலங்காயம் பஸ் நிலையம், மார்க்கெட் வீதி, மலைரோடு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    அப்போது தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்கவும் பொது மக்களிடம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

    • நாளை நடக்கிறது
    • பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

    முருகன் தியேட்டர் அருகில் இருந்து மாலை 4.15 மணிக்கு ஊர்வலம் தொடங்குகிறது. இதையடுத்து மாலை 6 மணி அளவில் பொ துக்கூட்டம் நடைபெறுகிறது.

    அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க வாணியம்பாடி, ஆம்பூர் அருகே உள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.

    இதைத் தொடர்ந்து ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அ.தி.மு.க. சார்பில் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஏரி கோடி பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி தலைமை வகித்தார். அனைவரையும் டிவி.சிவன் வரவேற்றார்.

    ஒன்றிய பொறுப்பா ளர்கள் கருணாகரன், நாகராஜ், முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி.ரமேஷ், டிடிசி சங்கர், நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் டாக்டர் திருப்பதி, யுவராஜ், மாவட்ட பிரதி பழனி உட்பட மாவட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 27 ஆயிரம் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 70) முன்னாள் சர்க்கரை ஆலை அலுவலர்.

    சில நாட்களுக்கு முன்பு வழுக்கி விழுந்தது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ராஜாமணி நேற்று வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் 27 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து ராஜாமணி கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ கவிழ்ந்து விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கட சமுத்திரம் ஊராட்சி பகுதியில் இருந்து இன்று காலை 6 பெண்கள் ஷூ கம்பெனிக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றனர்.

    அப்போது ஆட்டொ சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த அம்மு வயது (40) என்பவர் படுகாயம் அடைந்து ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தகவல்
    • விபத்து நடந்த இடத்தில் ஆய்வு

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் மூலம் விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெக்குந்தி என்ற இடத்தில் ஒரு வங்கியின் துணை மேலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள். அந்த விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விபத்திற்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், அப்பகுதி பொதுமக்களிடமும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள், இளைஞர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முன் வரவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை மேலாளர் மற்றும் வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் சோதனை
    • வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை கொண்டு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மலையில் அத்தனாவூர் அடுத்த பழதோட்டம் அருகில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.

    ஏலகிரி மலையில் ஒரே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஏலகிரி மலையில் உள்ள மாணவ, மாணவிகளும், ஜவ்வாது மலை, ஆலங்காயம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மற்ற பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. மாணவிகளுக்கு விடுதிகள் இல்லாமல் இருந்தது. பின்பு 2 வருடங்களுக்கு முன் தாட்கோ நிதியின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது.

    இந்நிலையில் நேற்று பழங்குடியினர் நலம் மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ்குமார் அரசு பழங்குடியினர் விடுதிகளை திடிரென ஆய்வு செய்தார்.

    மேலும் இங்குள்ள மாணவர்கள் தங்கும் இடத்தையும், கழிப்பிடங்களையும், குடிநீர், சமையலறைகளையும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை சமையலறையில் எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில் உடனடியாக இணைப்பை வழங்க உத்தரவிட்டார்.

    மேலும் புதிதாக கட்டி உள்ள மாணவிகளின் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பின்னர் வரும் கல்வியாண்டில் அதனை திறந்து சேர்க்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஏலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

    மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட பழங்குடியினர் அலுவலர் கலைச்செல்வி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால் மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×