ஆலங்காயம் பகுதியில் துண்டு பிரசுரம்

தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்க வலியுறுத்தல்
ஆலங்காயம் பகுதியில் துண்டு பிரசுரம்
Published on

வாணியம்பாடி:

ஆலங்காயம், காவலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிக ளிலும், கிராம பகுதியிலும் அடிக்கடி தீ விபத்து நடைபெறு கின்றது. காட்டுப்பகுதிகளில் மர்ம கும்பல் தீவைப்பு சம்ப வங்களும் நடைபெறுகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு ஆலங்காயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமையில் ஆலங்காயம் பஸ் நிலையம், மார்க்கெட் வீதி, மலைரோடு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

அப்போது தீ விபத்து தொடர்பாக உடன் தகவல் அளிக்கவும் பொது மக்களிடம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com