என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே தலையில் கல்ைல போட்டு தொழிலாளி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காய் தோப்பு, மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாஹ் பாகீஷ் (35), கூலித்தொழிலாளி. இவர் மாங்காய் தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதில் ஒருவர், அருகில் இருந்த கல்லை தூக்கி அல்லாஹ் பாகீஷ் மீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • நடவடிக்கை எடுக்க ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் டவுன் பஸ்சில் டிைரவர் செல்போன் பேசியப்படி பஸ் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அரசின் விதிமுறைகளை மீறி டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டி செல்லுகிறார். மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு கொண்டு அஜாக்ரதையாக பஸ்சை ஓட்டி வருகிறார்.

    இப்படி பயணிகள் ஏற்றிக்கொண்டு பஸ் இயக்குவதால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பிற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்னகுமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 55 கோரிக்கை மனு பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஜமாபந்தி முகாமில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 55 கோரிக்கை மனு பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் நீதியியல் உமாரம்யா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் (சபா.தி) சுமதி, வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், துணை தாசில்தார் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ரூ.200 பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாக்யராஜ் மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

    • தண்ட வாளத்தை கடக்கும்போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று ஓடும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இவர் ரெயில் தண்ட வாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் விசாரணை
    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே உள்ள பிஎம்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமுத்தன் ( வயது 60). பீடி சுற்றும் தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுமுத்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று திடீரென உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக, உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு குழி தோண்ட சென்றனர்.

    அப்போது சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், உடலை புதைக்க குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அனுமுத்தன் உறவினர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் மத்தான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சுடுகாட்டில் உடலை புதைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல் அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற மருத்துவமனையை முதல் அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

    இதில் ஆம்பூர் நகர மன்ற தலைவர் பதேகான் ஏஜாஸ் அஹ்மத், ஆறுமுகம், ஆம்பூர் நகரச் துணைத் தலைவர் ஷபீர் அஹ்மத், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நகரமன்ற உறுப்பினர் நஜீர் அகமத், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வாவூர் நசீர் அஹமத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் அச்சம்
    • ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் மான், மயில், கரடி, ஆமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இதில் கடந்த ஆண்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்தில் கரடி நடமாட்டம் காணப்பட்டது.

    அப்போது விறகு சேகரிக்கு சென்ற பெண் மற்றும் முதியவரை கரடி கடித்தது. காயமடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மயில்பாறை கிராமத்தை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக மலை அடிவாரத்திற்கு சென்றனர்.

    அப்போது முருகர் கோவில் அருகே திடீரென வந்த கரடி ஆடுகளை கடிக்க முயன்றது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த ஆடு மேய்ப்பவர்கள், பதறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தனர்.

    இதனால் கிராம மக்கள் மிகவும் அச்ச மடைந்து ள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மத்தான் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • பெண் கைது
    • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் இவரது மனைவி சென்னம்மாள் (வயது 36).

    இவர் வீட்டில் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்தி ற்கு கடத்தி வருவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்னம்மாள் வீட்டிற்கு சென்று சோதனை செய்து பார்த்த போது 50 கிலோ எடை கொண்ட 154 மூட்டைகள் என மொத்தம் 7,550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னம்மாளை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு நடந்தது
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கினார் ஏலகிரி மலை போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    இதில் தனியார் கல்லூரி மாணவிகள் ஏலகிரி மலை இயற்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

    இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என உறுதிமொழி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமையில், தென்னை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தென்னை மரக்கன்றுகள் நட்டனர்.

    ஊராட்சிகளில் சுத்தமான மற்றும் பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

    ×