என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 4 பேர் பலத்த காயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிந்து மாதவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதனையொட்டி இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேருக்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளி நாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வினோத் குமார் (வயது 19).

    அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேடி (வயது 25). சாதனா (வயது 32) மற்றும் அன்பு (வயது 25) ஆகிய 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு வாணியம்பாடி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்ற பொது மக்கள் படுகாயம் அடைந்த வேடி, சந்தோஷ்குமார், சாதனா ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் அன்பு லேசான காயமின்றி உயிர் தப்பினார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டரம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்றம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணைசெய்தனர்.

    அதில் அவர் திருப்பத்தூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(வயது 42)லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 55 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • கடன் சுமையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பி கடன் சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டியை சேர்ந்தவர். மாயகிருஷ்ணன் இவரது மகன் பசுபதி (வயது 47) இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார்.

    இதற்காக ஜோலார்பேட்டை பகுதியில் உள்ளவர்களிடம் அதிகம் கடன் வாங்கினார்.

    இதனையடுத்து பசுபதி 2 வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலைக்கு சென்றார்.

    இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊரான ஜோலார்பேட்டை பகுதிக்கு வந்தார். இங்கும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகமானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து மது போதைக்கு அடிமையானர்.

    கடன் சுமையால் மனமுடைந்த பசுபதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டுவண்டிகள் பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில், ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

    மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு ஈடுபட்ட மாதனூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 31), பசுபதி (22) மற்றும் முத்தரசன் (32) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஏலாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன். இவ ரது மகன் விக்ரம் (வயது 22), அந்தப்பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், மல்லபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் சினேகாவும் (20) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு சினேகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சினேகா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் பகுதியில் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் வரவில்லை. அதைத்தொடர்ந்து விக்ரம் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர்.

    • பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்றது
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில் 8-ம் நாள் திருவிழாவை யொட்டி நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே தலையில் கல்ைல போட்டு தொழிலாளி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காய் தோப்பு, மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாஹ் பாகீஷ் (35), கூலித்தொழிலாளி. இவர் மாங்காய் தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    அதில் ஒருவர், அருகில் இருந்த கல்லை தூக்கி அல்லாஹ் பாகீஷ் மீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • நடவடிக்கை எடுக்க ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் டவுன் பஸ்சில் டிைரவர் செல்போன் பேசியப்படி பஸ் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அரசின் விதிமுறைகளை மீறி டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டி செல்லுகிறார். மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு கொண்டு அஜாக்ரதையாக பஸ்சை ஓட்டி வருகிறார்.

    இப்படி பயணிகள் ஏற்றிக்கொண்டு பஸ் இயக்குவதால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பிற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்னகுமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 55 கோரிக்கை மனு பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஜமாபந்தி முகாமில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 55 கோரிக்கை மனு பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் நீதியியல் உமாரம்யா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் (சபா.தி) சுமதி, வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், துணை தாசில்தார் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ரூ.200 பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, ஆம்பூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பாக்யராஜ் மற்றும் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×