என் மலர்
திருப்பத்தூர்
- போலீசார் எச்சரிக்கை
- சீட் பெல்ட், ஹெல்மெட் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், அதிவேகம், ஒரே பைக்கில் 3 பேர் அமர்ந்து செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கடைபிடிக்காமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை கண்காணித்து 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர்களுக்கு தல ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் வாகன ஓட்டிகளிடம் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிதல், பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிதல் போன்ற விழிப்பு ணர்வுகளை போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தினர்.
மீண்டும் இது போன்ற போக்குவரத்து விதிமீறல் செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
- நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- 88 பேர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் முன்னறிவிப்பு இன்றி துப்புரவு பணியாளர்கள் 34 பேர் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளர்கள் 88 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தினதோறும் நகராட்சி வார்டுகளில் உள்ள வீதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதோடு, தூய்மை பணியையும் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சி கமிஷனர் பழனி, 34 பணியாளர்களை ஆள்குறைப்பு செய்துள்ளார். 34 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் 88 பேர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு, கமிஷனர் பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கமிஷனர் பழனி 'இது உயர் அதிகாரிகள் உத்தரவு. என்னால் எதுவும் செய்ய முடியாது' எனக்கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் மேலும் ஆவேசமடைந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சுந்தரேசன், ஏ. ஐ. டி .யூ.சி. மாவட்ட தலைவர் மணி, மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால், தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் ஆகியோரும் இவர்களுடன் இணைந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால் ஜோலார்பேட்டை நகராட்சி முழுவதும் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் புருஷோத்தம குப் பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), விவசாயி, இவர் இரவு வீட்டின் எதிரே அவருக்கு சொந்தமான தண்ணீர் எடுத்து செல்லும் டிராக்டரை நிறுத் தியிருந்தார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது டிராக்டர் காணாமல்போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன டியாக இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட் சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் டிராக்டரை திருடிசெல்வது பதிவாகி இருந்தது.
இந்த காட்சியை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- உரிமையாளர் வேலைக்கு சென்ற நிலையில் துணிகரம்
- போலீசார் விசாரணை
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அடுத்த கத் தாரி ஊராட்சி வ.உ.சி. நகர் பகு தியைச் சேர்ந்தவர் வினோத்குமார்.
இவரது மனைவி நிர்மலா (33). இவர், நாட்டறம்பள்ளி யில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.
வழக்கம் போல் சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு, நிர்மலா வேலைக்குச் சென்றார்.
வேலைகள் முடிந்து இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்திருந்தது. அதிலிருந்த நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிர்மலா திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு இறகுகளை பதிவு செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வட மாநில வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
ஒடிசாவில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் இணைந்து ஆம்பூர் தற்காலிக பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் சுற்றித்திரிந்தார்.
அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத்மாஜி (வயது 37) என்பதும், அம்மாநிலத்தில் இருந்து ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்
- அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மாதய்யன் (வயது 50).
இவரது மகள் தெய்வானை (23). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்த தாலபள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு கவுசிக் (4), இளவரசன் (இரண்டரை வயது) ஆகிய மகன்கள் உள்ளனர்.
மணிகண்டன் கூலி வேலை செய்து வந்தார். மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு, தெய்வானை நாள் முழுவதையும் தனது செல்போனில் பொழுதை கழித்துள்ளார்.
அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தெய்வானை நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட போது, அவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுடன் பழகி வருவது மணிகண்டனுக்கு தெரிந்தது.
இது தொடர்பாக மணிகண்டன் பலமுறை அவரைக் கண்டித்துள்ளார். இருப்பினும் தெய்வானை வாலிபர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
தனது பேச்சை கேட்காத கோபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது மாமியார் லட்சுமி (43)யை, வரவழைத்து அவருடன் மனைவி மற்றும் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து தெய்வானை தனது அம்மா லட்சுமி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தெய்வானை, தனது பிள்ளைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு, வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தெய்வானையின் அம்மா லட்சுமி ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெ க்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து, தெய்வானை கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார், தெய்வானை ஓசூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை அழைத்து வந்து, அறிவுரைகள் வழங்கி தாய் லட்சுமி உடன் அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடந்தது
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் மஞ்சள் பை திட்டம் தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
மஞ்சள் உபயோகத்தின் மூலம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. அங்கு பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை எனவும், பயன்படுத்தப்படுத்தி மக்கும் பொருட்கள் எவை எனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளியில் உள்ள அமிர்த சரோவர் ஏரிக்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு அப்பகுதியில் 1000 மரக்கன்றுகள் தொடங்கியது.
விழாவில் ஊராட்சிகள் இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- நகரா ட்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சியில் ரூ.1.35 கோடியில் சாலை பணிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தனர்.
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பல வருடங்களுக்கு போடப்பட்ட சாலையானது சிதலமடைந்து வருகிறது.
இதனால் நகராட்சி க்குட்பட்ட 10 இடங்களில் தார் சாலை, 12 இடங்களில் சிமெண்டு சாலை என மொத்தம் 22 சாலைகள் அமைக்க ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் நகராட்சிக்குட்பட்ட காவல் நிலைய சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அதிகாரிகள் துய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க.முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற தலைவர் காவியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 7-வது வார்டில் தூய்மை பணியை துவக்கி வைத்தனர். இதனை யொட்டி நகரா ட்சி அலுவலக த்தில் நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நகராட்சி அலுவலகம் எதிரே தூய்மை பணியை மேற்கொ ள்ளும் போது விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்த இளைஞர்களுடன் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சிறிது நேரம் கிரிக்கெட் விளை யாடினார்.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- மாற்று வழியில் சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வரை அரசு பஸ் தினசரி இயக்கப்படுகிறது.
அதன்படி நேற்று வழக்கும் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது புதுப்பேட்டை கடந்து வேட்டப்பட்டு கூட்ரோடு அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் நுழைய முயன்ற போது பாலத்தில் சிக்கி கொண்டது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கிழே இறங்கினர். இதனையடுத்து பஸ் டிரைவர் வேறுவழியின்றி மெதுவாக பின்னோக்கி சென்று திரும்பி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மாற்று வழியில் நாட்டறம்பள்ளி நோக்கி சென்றார்.
இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 12, 13-ந் தேதிகளில் நடக்கிறது
- கல்லூரி முதல்வர் தகவல்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய தாக தொடங்கப்ப ட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியாண்டிற்கான இளங்கலை (தமிழ், வணிகவியல்) இளமறிவியல் (புவியியல், தாவரவியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. புவியியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும் மறுநாள் 13 -ந் தேதியும் பி.ஏ. தமிழ், பி.காம் வணிகவியல், ஆகிய பாடபிரிவுகளுககு கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
மேலும் கலந்தாய்வு வின் போது மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வரவேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்ட 4, வங்கி பாஸ்புக் நகல் முதல் பக்கம், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டு மென நாட்டறம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெலக்கல்நத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் நந்தியப்பன் (வயது 30) என தெரியவந்தது.
இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து போலீசார் நந்தியப்பனை கைது செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






