என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணி பாதிக்கப்பட்டது"

    • நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
    • 88 பேர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் முன்னறிவிப்பு இன்றி துப்புரவு பணியாளர்கள் 34 பேர் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளர்கள் 88 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் தினதோறும் நகராட்சி வார்டுகளில் உள்ள வீதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதோடு, தூய்மை பணியையும் மேற்கொள்கின்றனர்.

    இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சி கமிஷனர் பழனி, 34 பணியாளர்களை ஆள்குறைப்பு செய்துள்ளார். 34 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் 88 பேர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு, கமிஷனர் பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கமிஷனர் பழனி 'இது உயர் அதிகாரிகள் உத்தரவு. என்னால் எதுவும் செய்ய முடியாது' எனக்கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

    இதனால் மேலும் ஆவேசமடைந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சுந்தரேசன், ஏ. ஐ. டி .யூ.சி. மாவட்ட தலைவர் மணி, மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால், தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் ஆகியோரும் இவர்களுடன் இணைந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதனால் ஜோலார்பேட்டை நகராட்சி முழுவதும் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    ×