என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சப்பை திட்டம் குறித்து முதலாம் ஆண்டு நிகழ்ச்சி தொடக்கம்
- வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடந்தது
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் மஞ்சள் பை திட்டம் தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
மஞ்சள் உபயோகத்தின் மூலம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. அங்கு பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை எனவும், பயன்படுத்தப்படுத்தி மக்கும் பொருட்கள் எவை எனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






