என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அயாஸ் அஹமத். இவரு டைய மகன் அப்ரார் அஹ மத் (வயது 19). தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக் கிள் மீது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக் குள்ளானது. இதில் அப்ரார் அஹமதுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நீங்கள் மற்றும் பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய டாக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதன்பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மறியல் போராட்டம் கார ணமாக சுமார் 2 மணி நேரத் துக்கும் மேலாக வாணியம்பா டியில் இருந்து ஆந்திரா செல் லும் சாலையில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துவிபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த துடன், டிரைவர் அஜீத் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கை விரல்களை உடைத்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி ஸ்ரீதேவி (வயது 50).

    இவர் கடந்த 25-ந் தேதி தனது வீட்டின் அருகே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீமதி, ஸ்ரீதேவியிடம் வீன் தகராறு செய்துள்ளார்.

    இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீமதி, அவரது தாயார் ஜெயசுந்தரி மற்றும் மகன் உதயமணி ஆகியோர் சேர்ந்து, ஸ்ரீதேவியை தாக்கியதோடு அவரது கை விரல்களை உடைத்துள்ளார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் ஸ்ரீமதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ரூ.1.43 கோடி செலவில் அமைகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர்மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர். தெ.பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் முதல் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ 38.48 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், மொளகரம்பட்டி முதல் கீழ்குரும்பர் தெரு வரை 1 கிமீ நீளம் தார் சாலை அமைத்திட ரூ 29.80 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,ஆதியூர் முதல் தங்கபுரம் சாலை வரை தார் சாலை அமைத்திட ரூ.12.66 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,மின் நகர் பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ.14.54 மதிப்பீட்டில் பணியையும், என மொத்தம் ஒரு கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், கேஎஸ்ஏ.மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கேஜி பூபதி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கு பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தாரணி (வயது 22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள், ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை
    • இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் ஆய்வு செய்தார்.

    முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களையும் கண்காணிப்பு கேமரா ஒளிப்பதிவுகளையும் கலெக்டர் பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

    மேலும் தேர்தல் ஆணையத் தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.எம்.எஸ். 2.0 என்ற செயலி மூலமாக தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை மாவட்ட கிடங்கில் இருந்து நேரடியாக இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இதில் க.தேவராஜி எம். எல்.ஏ, உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தனி தாசில்தார் பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

    • பூமி பூஜை நடந்தது
    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

    ஜோலார்பேட்டை,:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.71.46 லட்சம் மதிப்பீட்டில் 1.600 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கும், கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் ரூ.14.89 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு ஜீவாநகர் சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வரவேற்றார்.

    மேலும் கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ.12.07 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எழில்கவிதா, உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதாதண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமிசுரேஷ், திருப்பதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

    • மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம், சந்திரபுரம், குருசிலாப்பட்டு அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் மேளம் அடிக்கும் தொழிலாளிகள் உள்ளனர்.

    இந்த பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு 10.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதியில் மேளம் அடிக்க புறப்பட்டனர். 10 பேரும் மேள வாத்தியங்களுடன் ஒரே ஆட்டோவில் சென்றனர்.

    கந்திலி சந்தைமேடு அருகே சென்ற போது ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியது.

    இதில் திருப்பத்தூர் கசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாரதி (வயது 20), சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18), சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    7 பேர் படுகாயமடைந்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டனர்.

    இதில் ஈசன் (20) அரவிந்தன் (20) என்ற தொழிலாளர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரவிந்தன் இன்று காலை இறந்தார்.

    மேலும் சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், குரிசிலா பட்டு அஜித், பெரியகரம் ஈஸ்வரன், அச்சமங்கலம் சஞ்சய், புத்தகரம் வேலு ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிங்கப்பூரில் வசிக்கும் கணவருடன் செல்போனில் தகராரில் விபரீதம்
    • வாணியம்பாடி ஆர்டிஓ விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிப் பட்டு அடுத்த புல்லாக் குட்டை பகுதியை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று, அங்குள்ள தனி யார் நிறுவனத்தில் எலக்ட் ரீசியன் வேலைக்கு சேர்ந் துள்ளார்.

    இவரது மனைவி மதிமாலா (30). தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தக ராறு ஏற்பட்டு வந்ததாம். சிங்கப்பூருக்கு சென்ற பிறகும் செல்போன் மூலம்அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தி னம் மதியம், கணவருடன் செல்போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதிமாலா, 'தற்கொலை செய்து கொள் ளப் போகிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்தா ராம்.

    அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உறவினர்கள் வந்து மதிமாலா வசிக்கும் வீட்டின் கதவை தட்டி யுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மதிமாலா தூக்குப் போட்ட நிலையில் இருந் தார். உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மதிமாலா ஏற் கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணியம் பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இறந்த மதி மாலாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வாணியம்பாடி ஆர்டிஓ பிரேமலதா விசாரித்து வருகிறார்.

    • ஒருவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ருக்மணி. நேற்று கண வன்- மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதேப் பகுதியை சேர்ந்த ஜெய் சங்கர் சொத்து தகராறு காரண மாக தன்னை பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பதாக நினைத்து தகராறு செய் துள்ளார்.

    தகராறு முற்றி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதில் உஷாராணி மற் றும் ஜெய்சங்கர் ஆகிய இருவ ரையும் தாக்கி கொலை மிரட் டல் விடுத்துள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த ருக்மணி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ருக்மணி கொடுத்த புகாரின் பேரில் உஷாராணி மற்றும் ஜெய்சங் கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    ருக்மணி மற் றும் கனகராஜ் இருவரும் தாக் கியதாகஉஷாராணி கொடுத்த புகாரின்பேரில் ருக்மணி மற்றும் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
    • கரும்பு ஜூஸ் வாங்குவது போல் நடித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர், திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் கூடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கரும்பு ஜூஸ் பார்சல் கேட்டுள்ளனர்.

    இதனையடுத்து மனோகரன் ஜூசை பார்சல் கட்டிக்ெகாண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 வாலிபர்கள் மனோகரன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மனோகரன் குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவம் நடைபெறுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் (போளூர்- ஜமுனாமரத்தூர் - ஆலங்காயம்- வாணியம்பாடி) சாலையில் பாப்பனேரி கூட்டுரோடில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம் எல் ஏ முன்னிலை வகித்தார்.

    வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் முதல் கட்டமாக 400 மரச்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உள்ளாச்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×