என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கு பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தாரணி (வயது 22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






