என் மலர்
திருப்பத்தூர்
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள செங்கலி குப்பம் ஊராட்சியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 41) .
இவரது மனைவி அறிவுக்கொடி (37). 2 பேரும் தனியார் ஷூ கம்பெனியில் தொழிலா ளியாக வேலை செய்து வருகின்றனர்.
கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்துபார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை யோரங்களில் உள்ள மரங்களை வெட்டு பணிகள் தீவிரம்
- ஆகஸ்டு மாதம் நிறைவடையும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஆலங்கா யம்-நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை நடந்து வருகிறது. சாலை யோரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜவ்வாது மலையின் ஒரு பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியை தவிர மற்ற பகுதிகளில், அகலப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது தினமும் சராசரியாக 20,000 வாகனங்கள் இந்தப் பாதையை பயன்ப டுத்துகின்றன.
மேலும் இந்த நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்த பிறகு திருப்பத்தூர், வாணி யம்பாடி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளுக்கு மலைவாழ் மக்கள் தங்கள் விளைபொருட்களை எளிதாகக் கொண்டு சென்று விற்கமுடியும்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
இத்திட்டத்திற்கு விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் 2020-21-ஆம் ஆண்டு நிதியளிக்கப்பட்டது.
கன்டெய்னர் லாரிகள், லாரிகள் மற்றும் பஸ்கள் இந்த சாலையை பயன்படுத்தும் வகையில் 7 மீ அகலமுள்ள சாலை தற்போது 10 மீட்டராக விரிவுபடுத்தப்படுகிறது.
மொத்தமுள்ள 36 கி.மீ தொலைவில், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களுக்கு இடையேயான 25 கி.மீ.தொலைவு அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது.வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை 5 கி.மீ தொலைவிற்க்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜவ்வாது மலையில் உள்ள காப்புக் காடு பகுதியில் 6 கி.மீ தொலைவிற்கு மத்திய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டி உள்ளது.அதற்கு ஆன்லைனில் அனுமதி பெறுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்டுள்ளன.வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும்பதிலாக புளி, ஜாமுன், வேம்பு என 10 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
இது கிராம மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதிகப்படியான மழைநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் வெளியேற்ற 1.5 மீ ஆழத்தில் புயல் நீர் வடிகால்களும் கட்டப்படுகின்றன வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- அனைத்து கோரிக்கைகளின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்
- வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வாணியம்பாடி:
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமை தாங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்தி றனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர், குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்பட்டு, அனைத்து கோரிக்கைகளின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வங்கி கடன் மானியம் பெறுவதற்கு கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளி நபரின் கோரிக்கை யை விசாரித்த வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பரிந்துரை கடிதம் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.
இந்த மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில், தனி தனிதாசில்தார் (சமூக பாதுகாப்பு) பழனி, சுரேஷ் (ஆம்பூர்) உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 8 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது
- கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட மோதகுட்டை சுற்றியுள்ள சுமார் 5- க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய குடும்பங்கள், கூலி வேலை செய்யும் குடும்பங்கள் என சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரங்களுக்கு எடுத்து செல்லவும், கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாணவிகள் பெத்தகல்லுபள்ளி, நெக்குந்தி, செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதனால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மோதகுட்டை கிராமத்தில் இருந்து நேரடியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேப்பம்பட்டு வழியாக நடைபாதை மட்டும் உள்ளது.
குறித்த நேரத்தில் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இந்த நடைப்பாதை வழியாக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சுமந்து கொண்டு வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரங்களுக்கு எடுத்து சென்று வருகின்றனர்.
இதனால் நடைப்பாதையை வண்டி வழி பாதையாக ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர்.
ஆனால் இது நாள் வரை கோரிக்கை மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் புகார் மனு அளித்தனர்.
இதே பகுதியில் ஆயுதகாவல்படை மைதானம் அமைய உள்ளது. எனவே காவலர் ஆயுத படை மைதானம் அமைப்பதற்கு முன்பே நடைபாதையை வண்டி வழி பாதையாக மாற்றி
கிராம மக்கள், விவசாயிகள், மாணவ மாணவிகள் பயன்பெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 1½ நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்
- தாசில்தாரிடம் புகார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்டமூக்கனூர் அடுத்த அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாமுடி இவரது மகன்கள் மகேந்திரன் மற்றும் பெருமாள் ஆகியோர் நிலத்திற்கு நடுவில் 10 அடியளவில் செல்லும் சாலையை சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 75 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
நிலத்தினை வழி பாதையாக தொடர்ந்து செல்ல பாதை அமைக்க வழி விடமாட்டோம் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரு குடும்பத்தார்கள அனைவரும் பொது வழியினை அவர்களும் பயன்படுத்த கூடாது என்று அவர்கள் வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் பள்ளம் அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு குடும்பத்தினர் அன்றாட வேலைகளை எங்களால் வெளியே செல்ல வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை இது குறித்து மேற்கொண்ட 2 குடும்பத்தினர் நேற்று நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரியிடம் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அப்போது இரு தரப்பினரும் வரவழைத்து சுமார் 1½ நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் அடுத்த வாரம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்களை தலைமையில் இப்பிரச்சினை தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடைபெறுவதால் பொதுமக்களால் தோண்டப்பட்ட பள்ளத்தினை மண் கொட்டி அடைத்தனர். இதனால் மேற்படி இரு குடும்பத்திற்கும் வழி கிடைத்ததால் சமரச பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்பட்டது.
உடன் மண்டல துணை வட்டாட்சியர் பூபதி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்பபட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி இதய நகரில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களின் பிள்ளைகள் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு அரசு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு அரசு சலுகை பெறுவதற்கான சாதி சான்றிதழ் பெற சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் கடந்த வாரம் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
இதனை அடுத்து சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க சிரமம் ஏற்பட்டு வருவதாக நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட முறையிட்டனர்.
இதனால் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் நேற்று இதய நகர் பகுதியில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்காகவும் முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலையில் நேற்று முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இதில் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- 12 பாட்டில்கள் பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஜெயலட்சுமி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், கட்டேரி அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த பவுனம்மாள் (70) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பெண்களையும் போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அயாஸ் அஹமத். இவரு டைய மகன் அப்ரார் அஹ மத் (வயது 19). தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக் கிள் மீது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக் குள்ளானது. இதில் அப்ரார் அஹமதுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நீங்கள் மற்றும் பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய டாக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதன்பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மறியல் போராட்டம் கார ணமாக சுமார் 2 மணி நேரத் துக்கும் மேலாக வாணியம்பா டியில் இருந்து ஆந்திரா செல் லும் சாலையில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துவிபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த துடன், டிரைவர் அஜீத் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கை விரல்களை உடைத்தனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி ஸ்ரீதேவி (வயது 50).
இவர் கடந்த 25-ந் தேதி தனது வீட்டின் அருகே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீமதி, ஸ்ரீதேவியிடம் வீன் தகராறு செய்துள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீமதி, அவரது தாயார் ஜெயசுந்தரி மற்றும் மகன் உதயமணி ஆகியோர் சேர்ந்து, ஸ்ரீதேவியை தாக்கியதோடு அவரது கை விரல்களை உடைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் ஸ்ரீமதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
- கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- ரூ.1.43 கோடி செலவில் அமைகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர்மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர். தெ.பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் முதல் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ 38.48 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், மொளகரம்பட்டி முதல் கீழ்குரும்பர் தெரு வரை 1 கிமீ நீளம் தார் சாலை அமைத்திட ரூ 29.80 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,ஆதியூர் முதல் தங்கபுரம் சாலை வரை தார் சாலை அமைத்திட ரூ.12.66 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,மின் நகர் பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ.14.54 மதிப்பீட்டில் பணியையும், என மொத்தம் ஒரு கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், கேஎஸ்ஏ.மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கேஜி பூபதி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கு பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தாரணி (வயது 22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள், ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






