என் மலர்
நீங்கள் தேடியது "10 meters widened"
- சாலை யோரங்களில் உள்ள மரங்களை வெட்டு பணிகள் தீவிரம்
- ஆகஸ்டு மாதம் நிறைவடையும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஆலங்கா யம்-நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை நடந்து வருகிறது. சாலை யோரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜவ்வாது மலையின் ஒரு பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியை தவிர மற்ற பகுதிகளில், அகலப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது தினமும் சராசரியாக 20,000 வாகனங்கள் இந்தப் பாதையை பயன்ப டுத்துகின்றன.
மேலும் இந்த நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்த பிறகு திருப்பத்தூர், வாணி யம்பாடி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளுக்கு மலைவாழ் மக்கள் தங்கள் விளைபொருட்களை எளிதாகக் கொண்டு சென்று விற்கமுடியும்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
இத்திட்டத்திற்கு விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் 2020-21-ஆம் ஆண்டு நிதியளிக்கப்பட்டது.
கன்டெய்னர் லாரிகள், லாரிகள் மற்றும் பஸ்கள் இந்த சாலையை பயன்படுத்தும் வகையில் 7 மீ அகலமுள்ள சாலை தற்போது 10 மீட்டராக விரிவுபடுத்தப்படுகிறது.
மொத்தமுள்ள 36 கி.மீ தொலைவில், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களுக்கு இடையேயான 25 கி.மீ.தொலைவு அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது.வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை 5 கி.மீ தொலைவிற்க்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜவ்வாது மலையில் உள்ள காப்புக் காடு பகுதியில் 6 கி.மீ தொலைவிற்கு மத்திய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டி உள்ளது.அதற்கு ஆன்லைனில் அனுமதி பெறுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்டுள்ளன.வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும்பதிலாக புளி, ஜாமுன், வேம்பு என 10 மரக்கன்றுகள் நடப்படுகிறது.
இது கிராம மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதிகப்படியான மழைநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் வெளியேற்ற 1.5 மீ ஆழத்தில் புயல் நீர் வடிகால்களும் கட்டப்படுகின்றன வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.






