என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Referral to Bank Branch"

    • அனைத்து கோரிக்கைகளின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்
    • வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்தி றனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர், குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்பட்டு, அனைத்து கோரிக்கைகளின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    வங்கி கடன் மானியம் பெறுவதற்கு கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளி நபரின் கோரிக்கை யை விசாரித்த வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பரிந்துரை கடிதம் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.

    இந்த மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர குறைதீர்வு கூட்டத்தில், தனி தனிதாசில்தார் (சமூக பாதுகாப்பு) பழனி, சுரேஷ் (ஆம்பூர்) உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×