ஆபத்தான முறையில் தொங்கும் மின் கம்பிகள்

சீரமைக்க கவுன்சிலர் வலியுறுத்தல் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஆபத்தான முறையில் தொங்கும் மின் கம்பிகள்
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டில் தம்மா தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் மின் கம்பிகள் 10 அடி உயரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும், கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் உரசிய படி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த சாலையில் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்களள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி கவுன்சிலர் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com