என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் கணவருடன் தஞ்சம்"

    • கர்நாடகவில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோருடன் செல்ல இளம்பெண் மறுப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாலி (வயது 23) இவர் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தன்னுடைய மகள் காணவில்லை என்றும் அதே பகுதியை சேர்ந்த குடியண்ணன் மகன் கோகுல் வாசன் (வயது 23) அழைத்துச் சென்றதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஷிவாலி மற்றும் கோகுல்வாசன் ஆகிய இருவரும் கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதனால் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அறிவுரை வழங்கினர். இளம் பெண்ணை தாயார் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். ஆனால் இளம்பெண் மறுத்துவிட்டார். இதனால் காதல் கணவருடன் இளம்பெண் சென்றார்.

    ×