என் மலர்
திருப்பத்தூர்
- 2 குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப் பல்லி பகுதியில் 2 குட்டிகள் உடன் வந்த 5 யானைகள் மாமரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை யானைகள் நாசம் செய்தது.
இது குறித்து ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். உமராபாத் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
- பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
வாணியம்பாடி:
பக்ரீத் பெருநாள் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு குர்பானி கொடுப்பது வழக்கம்.
சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டகங்கள் பலியிட்டு குர்பானி கொடுப்பதை இஸ்லாமியர்கள் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் இர்ஷாத் என்பவர் ஒட்டகம் ஒன்றை குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வந்தார். போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேதாஜி நகர் மற்றும் மருத்துவர் காலனி பகுதியில் உள்ள இர்ஷாத் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்ட ஒட்டகத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
தொடர்ந்து வாணியம்பாடியில் ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், வருவாய்த்துறையும் எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நள்ளிரவில் மீண்டும் ஒட்டகம் லாரி மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 15 வாகனங்கள் பறிமுதல்
- ெஜயிலில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் தாம லேரிமுத்தூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மாடப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பத்தை சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. தொடர்ந்துவிசாரணையில் அவர் ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட
சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
- தொடர்ந்து மழை பெய்து வருகிறது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடிரென மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதியவர்கள் மற்றும் பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.
- விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்
- நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆம்பூர்:
திரும்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத்சாஹெப், தொழிலாளி.
இவரது மகள் ஹப்சா ( வயது 3). சிறுமி நேற்று சாந்தாமியான் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென 3 நாய்கள் உள்ளே நுழைந்தது.
விளையாடிக் கொண்டிருந்த ஹப்சாவை நாய்கள் திடீரென துரத்தி கடித்துக் குதறியது. வலி தாங்காமல் சிறுமி கூச்சலிட்டு அழுதார்.
ஹப்சா அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.
படுகாயம் அடைந்த சிறுமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆம்பூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.
நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் விழுந்து, எழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அருகே உள்ள ஜெயமாதா நகர் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு ரெயில்வே குடியிருப்பு பகுதியில் காசு வைத்து சூதாடிய சந்தைக்கோ டியூர் வக்கணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சந்திர சேகரன் (வயது 40), அரவிந்தன் (30), சிவகுமார் (49), பிரேம் குமார் (42), அருள் நாதன் (39), மணிகண்டன் (23), காந்தி ராமன் (45) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமி ருந்து ரூ.250 மற்றும் 40 பொம்மை சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 25 பாட்டில்கள் பறிமுதல்
- சிறையில் அடைப்பு
வாணியம்பாடி:
வாணியம்பாடி நியூ டவுன் சாலையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப் போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த கோனாமேடு பகுதியை சேர்ந்த சசிகுமார்(வயது26) அரவிந்த்குமார்(25) ஆகிய இருவரையும் பிடித்தனர்.
அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கால்நடை அலுவலகங்களில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிகலாம்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க, மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவில், 50 சதவீதம் செலவு தொகை மானியமாக தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 50 சதவீத பணத்தை தொழில்முனைவோர் முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி தொழில் தொடங்க தேர்வு செய்யப்படுவோர், சொந்த ஊரில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அவரது பெயரில் கோழி கொட்டகை அமைக்க தேவைப்படும் 625 சதுரஅடி நிலம் பதிவாகி இருக்க வேண்டும்.
கொட்டகை அமைக்கும் இடம் மனித குடியிருப்பு பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தொழில்முனைவோர்
அருகில் உள்ள கால்நடை அலுவலகங்களில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பச்சக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே காதல் ஜோடி 2 பேர் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை மர்ம கும்பல் நோட்டமிட்டது.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கலி, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து 2 பேரும் ஆம்பூர் தாலுகா போலீசார் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு
- திருப்பத்தூர் அஞ்சல் துறை அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
அஞ்சல் துறையின் மண்டல பெறும் அளவிலான ஓய்வூதியர் குறை தீர்வுக்கூட்டம் ஜுலை மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-
அஞ்சல் துறையில் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை மாதம் 11-ம் தேதி காலை 11 மணியளவில் மேற்கு மண்டலத்தின் குறைதீர்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் ெரயில்வே தொலைபேசி துறை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பாக திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அளவில் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடகவில் திருமணம் செய்து கொண்டனர்
- பெற்றோருடன் செல்ல இளம்பெண் மறுப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாலி (வயது 23) இவர் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தாயார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தன்னுடைய மகள் காணவில்லை என்றும் அதே பகுதியை சேர்ந்த குடியண்ணன் மகன் கோகுல் வாசன் (வயது 23) அழைத்துச் சென்றதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஷிவாலி மற்றும் கோகுல்வாசன் ஆகிய இருவரும் கர்நாடக மாநில பெங்களூர் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனால் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அறிவுரை வழங்கினர். இளம் பெண்ணை தாயார் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். ஆனால் இளம்பெண் மறுத்துவிட்டார். இதனால் காதல் கணவருடன் இளம்பெண் சென்றார்.
- சீரமைக்க கவுன்சிலர் வலியுறுத்தல்
- பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டில் தம்மா தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் மின் கம்பிகள் 10 அடி உயரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும், கனரக வாகனங்கள் மின் கம்பிகளில் உரசிய படி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த சாலையில் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்களள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி கவுன்சிலர் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.






