என் மலர்
உள்ளூர் செய்திகள்

குர்பானி கொடுக்க கொண்டுவரப்பட்ட ஒட்டகம்.
குர்பானி கொடுக்க கொண்டுவரப்பட்ட ஒட்டகத்தை திருப்பி அனுப்பினர்
- அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
- பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
வாணியம்பாடி:
பக்ரீத் பெருநாள் வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, மற்றும் ஒட்டகங்களை பலியிட்டு குர்பானி கொடுப்பது வழக்கம்.
சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டகங்கள் பலியிட்டு குர்பானி கொடுப்பதை இஸ்லாமியர்கள் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் இர்ஷாத் என்பவர் ஒட்டகம் ஒன்றை குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வந்தார். போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேதாஜி நகர் மற்றும் மருத்துவர் காலனி பகுதியில் உள்ள இர்ஷாத் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்ட ஒட்டகத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
தொடர்ந்து வாணியம்பாடியில் ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், வருவாய்த்துறையும் எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நள்ளிரவில் மீண்டும் ஒட்டகம் லாரி மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.






