திருப்பத்தூர் பகுதிகளில் பைக் திருடிய வாலிபர் கைது

15 வாகனங்கள் பறிமுதல்ெஜயிலில் அடைத்தனர்
கைது செய்யப்பட்ட வாலிபர் மற்றும் போலீசாரை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட வாலிபர் மற்றும் போலீசாரை படத்தில் காணலாம்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் தாம லேரிமுத்தூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மாடப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பத்தை சேர்ந்த பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது. தொடர்ந்துவிசாரணையில் அவர் ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட

சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com