என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்தார்
    • அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் துறை அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்.

    அவர்களின் ஊனம் குறித்த தகவல்கள் மேலும் இவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவர்களா அல்லது அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என்பதை நேரில் ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்ரிதக்கா பகுதியில் நேற்று வருவாய் கோட்ட அலுவலர் பானு அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.

    துறை அலுவலர்களை கண்காணித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்களை சேகரித்தார். ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை
    • 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஏரிகோடி பகுதியை சேர்ந்தவர் ரவி. ரத்தப்பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இவருக்கு பிறந்தநாள் பரிசாக ரவி மொபட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அந்த மொப்பட்டை வீட்டின் வெளியே இரவு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றனர்.

    பின்னர் அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மொபட் மாயமாகி இருந்தது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு வந்தனர்.

    ரவியின் வீட்டின் அருகே வந்து வெளிபக்கமாக வீட்டை தாழிட்டனர், பின்னர் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து மொபட்டை திருடிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் மொபட்டை திருடிச்செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

    இது குறித்து ரவி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அதில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய மொப்பட்டை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமணமான பெண்ணுடன் வாலிபர் ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமனேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 50). இவருக்கு திருமணமாகி அம்பிகா (43) என்ற மனைவியும், சந்துரு என்கிற ராமமூர்த்தி (18) மகனும் உள்ளனர்.

    சந்துரு கட்டிடமேஸ்வரியாக வேலை செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அப்போது தனபால் போனில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசினார். தான் பெங்களூரில் வேலை செய்து வருவதாக சந்துரு தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் சந்துருவை பெற்றோர் போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் சந்துரு போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது நண்பர்களிடம், சந்துருவின் பெற்றோர் விசாரித்தனர். சந்துரு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை பெண்ணுடன் பழகி வந்ததாகவும், அவர் தற்போது அந்தப் பெண்ணுடன் சென்னைக்கு சென்று வசித்து வருவதாகவும் கூறினார். மேலும் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இது குறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிக்க சென்ற போது பரிதாபம்
    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் உடல் மீட்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). கார்பென்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மாலை தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றார். பின்னர் அங்கு உள்ள பாலாற்றின் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.

    அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். பல மணி நேரம் போராடியும் கோவிந்தராஜ் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜை தடுப்பணையில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுப்பணை பகுதியில் கோவிந்தராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார். கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுசாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தல்
    • வீட்டின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி அடியத்தூர் பகுதியை சேர்ந்த இரு குடும்பத்தினரின் பட்டா நிலத்தின் வழியாக 75 குடும்பங்களை சேர்ந்த பொது மக்கள் சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பிரதான சாலைக்கு செல்ல தற்போது பயன்படுத்தி வரும் வழியில் பொதுசாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை.

    இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இருவரின் வீட்டின் முன்புறமும், பின்புறமும் பள்ளம் தோண்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இது குறித்து இரு குடும்பத்தினரும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் அவரது தலைமையில் வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானு ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான இடம் குறித்து கேட்டறிந்து இருதரப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு குடும்பத்தினரின் பட்டா இடத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதால் சாலை அமைக்க எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்ககூடாது என நிலத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி, அரசுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஏழுமலை, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவ லர், ஊர் பொதுமக்கள், பட்டா நிலத்தின் 2 குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

    • பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை சேர்த்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளியில் பகுதியில் சுடுகாடு உள்ளது. அப்போது சுடுகாடு அருகே உள்ள மரத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெலக்கல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது.

    நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, காலையிலும் லேசாக தூரிக்கொண்டிருந்தது. வேலூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    தொடர்மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் விவசாய நிலங்களில் ஏர் உழும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் மழை பெய்ததால் சரியான மானாவரி பட்டத்தில் பயிர்கள் எளிதில் அறுவடைக்கு தயாராகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில் அதிகபட்சமாக

    நாட்டறம்பள்ளியில் 42.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அதேபோல் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் 25.20 மி.மீ, திருப்பத்தூரில் 19.40 மி.மீ, ஆம்பூரில் 19 மி.மீ, திருப்பத்தூர் சக்கரை ஆலையில் 18 மி.மீ, வாணியம்பாடியில் 11 மி.மீ மற்றும் ஆலங்காயத்தில் 6 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

    • மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
    • கண்காணிப்பு கேமரா பதிவால் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் அதே பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வருகிறார்.

    கடந்த 14-ந் தேதி காலை சுகுமார் முத் துமாரியம்மன் கோவிலை திறக்க சென்ற போது கோவிலில் வைத்திருந்த உண்டியல் திருடு போனது தெரிய வந்தது. இதனை அடுத்து சுகுமார் ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கோவில் உண்டியலை திருடிய நபர்களை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து தேடி வந்தனர்.

    அதில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் உண் டியலை திருடிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந் தது. இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் மேம்பால பகுதியில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தியபோது சி.சி.டி.வி. கேமராவில் பதிவானவர் அடையாளம் இருந்தது.

    விசாரணையில் அம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற வாலிபர் அவர்தான் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகன் ஜிவித்கு மார் (வயது 24) என்பதும் இவருடன் வினோத்குமார், ஆனந்த குமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    திருடிய பணத்தை மது குடிக்க பயன்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜிவித்குமார்போலீசார் கைது செய்து திருப் பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்குமார் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வரு. கின்றனர்.

    • நமக்கு நாமே திட்டத்தில் வழங்கப்பட்டது
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ராஜாஸ்தான் சங்கம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சி பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நகரமன்றத் தலைவர் உமாசிவாஜி கணேசனிடம் சங்க நிர்வாகிகள் ரஞ்சித்குமார், தேஜ்ராஜ், மதன்லால், உமாராம், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

    இதில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வசந்தி, நகர கூட்டுறவு வங்கி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • போலீசார் விசாரணை
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பச்சை குப்பம் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.

    இதன் அருகே முட்புதர்கள் வளர்ந்து அடர்ந்த காடுகள் போல் உள்ளது. இங்கு காதல் ஜோடிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முட்புதருக்கு காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

    இதனைக் கண்ட 4 பேர் கொண்ட கும்பல் அந்த காதல் ஜோடிகளிடம் சென்று அவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் காதல் ஜோடிகளிடம் இருந்த செல்போன்கள் மற்றும் 2 பவுன் செயினை பறித்தனர்.

    பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து காதல் ஜோடிகள் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இன்று காலை போலீசார் காதல் ஜோடிகளிடம் செல்போன் நகை திருடிய பச்சை குப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 23) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
    • சுகாதாரத்தை பேணி பணியில் ஈடுபட அறிவுரை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பெட்டி கடைகள் உள்ளது.

    இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கடலை மிட்டாய்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், கடலை மிட்டாயில் மர குச்சி இருக்கும் படத்தை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறியிருந்தார்.

    இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் (உணவு பாதுகாப்பு), வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி (பொறுப்பு) ஆகியோர் வாணியம்பாடியில் உள்ள கடலை மிட்டாய் தயாரிக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்ப ட்டிருந்த அனைத்து கடலை மிட்டாய்களும் பரிசோதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, உரிமையாளரிடம் சுகாதாரமான முறையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும், கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் சுகாதாரச் சான்று பெற்றிருக்க வேண்டும். தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி உணவு பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

    • ஆடுகளுக்கு தழை பறித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 47). இவர் திருப்பத்தூர் அரசு பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் இவர் வளர்த்து வரும் ஆடுகளுக்கு உணவளிக்க வீட்டின் அருகே இருந்த மரத்தில் இரும்பு தொரட்டி மூலம் தழைகளை பறித்தார். அப்போது கண்ணதாசன் கையில் பிடித்திருந்த தொரட்டி வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. அப்போது திடீரென அவர் மீது

    மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை, அவரது தாயார் ரத் தினம்தூக்கச் சென்றுள்ளார். அப்போது அவரையும் மின் சாரம் தாக்கி உள்ளது.

    இதை பார்த்த பொதுமக் கள் கண்ணதாசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். படுகாயம் அடைந்த அவ ரது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த தும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீ சார் சென்று பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×