என் மலர்
நீங்கள் தேடியது "Crops are easily ready for harvest"
- வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது
- விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது.
நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, காலையிலும் லேசாக தூரிக்கொண்டிருந்தது. வேலூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தொடர்மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் விவசாய நிலங்களில் ஏர் உழும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் மழை பெய்ததால் சரியான மானாவரி பட்டத்தில் பயிர்கள் எளிதில் அறுவடைக்கு தயாராகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில் அதிகபட்சமாக
நாட்டறம்பள்ளியில் 42.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதேபோல் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் 25.20 மி.மீ, திருப்பத்தூரில் 19.40 மி.மீ, ஆம்பூரில் 19 மி.மீ, திருப்பத்தூர் சக்கரை ஆலையில் 18 மி.மீ, வாணியம்பாடியில் 11 மி.மீ மற்றும் ஆலங்காயத்தில் 6 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.






