என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பூமி பூஜை நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி, மல்லப்பள்ளி மற்றும் ஏரியூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி, நாயனசெருவு, வெள்ளநாயாக்கனேரி, பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனிசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மு.மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 செட் சீருடை,. பாய், போர்வை போன்றவை வழங்கப்படுகிறது
    • ஆதார் அட்டை நகல், வங் கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் கல்லூரி மாணவ,மாணவியர் ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 பள்ளி மாணவர் விடுதிகளும், 3 பள்ளி மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 13 விடுதிகள் இயங்கி வருகின்றன.

    இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகளில் பயி லும் அனைத்து மாணவ, மாணவியரும் தங்கி, உணவருந்தி கல்வி பயில தகுதியுடையவர் உரிய இட ஒதுக்கீடு விதிகளின்படி விடுதி வசதி வழங்கப்படும்.

    மேற்படி, விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் தரமான உணவு, பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை,. பாய், போர்வை போன்றவை வழங்கப்படுகிறது.

    மாலை நேரங்களில் விளையாட விளையாட்டு பொருள்கள் வழங் கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக் குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங் கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    • அண்ணனுக்கு வலைவீச்சு
    • பூட்டை உடைத்து சோதனை செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா, ஆத்தூர்குப் பம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனை கேத்தாண் டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு என்ற பூவரசன் என்பவர் கடந்த5மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக வாடகைக்கு எடுத்துள்ளார்.

    இந்த நிலை யில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வாணியம்பாடிஇன்ஸ் பெக்டர் நாகராஜ், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் குடோனின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.

    அப்போது குடோனில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதனையடுத்து நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அண் ணன்-தம்பிகளான பூவரசன், பொன்னுரசன் (வயது 25) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவுசெய்தனர். இதில் பொன்னுரசனை போலீசார் கைது செய்தனர். பூவரசனை தேடி வருகின்றனர்.

    • வருவாய் அலுவலர் ஆய்வு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்றம்பள்ளி வீடற்ற மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க பணியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் மூக்கனூர், சந்திரபுரம், ஜெயபுரம், வெலக்கல்நத்தம் ஆகிய பகுதியில் அதிகளாவில் உள்ள வீடற்ற மாற்று திறனாளிகள் உள்ளனர்.

    இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லட்சுமி ஆய்வு செய்தார்.

    அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய் அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே நாட்றம்பள்ளி சாலையில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.

    கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் பொது அறிவு, தமிழ் பாடம் ஆகிய பாடங்களை பயிற்சியில் கலந்துகொண்ட போட்டித் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பாடம் நடத்தினார்.

    மேலும் இந்த பயிற்சியின் போது பள்ளியின் நிறுவனர் கே.எஸ். சிவப்பிரகாசம், முதல்வர் கிரிநாத், பயிற்றுனர்கள் பாலாஜி, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அண்ணாண்டபட்டி கூட்ரோடு பகுதியில் சந்தேகத்தின் பெயரில் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    மேலும் அவரிடம் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று காந்திநகர் பகுதியில் உள்ள ஏரியில் சந்தேகத்தின் பேரில் இருந்த வாலிபரையும் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட திலீப் குமார் (வயது 24) மற்றும் வெங்கடேஷ் (24) ஆகிய 2 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 45 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பலர் கலெந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் மக்களை தேடி மருத்துவத்திட்டன் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 10 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், 14 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 5 நபர்களுக்கு நத்தம் பட்டாகள், 5 நபர்களுக்கு இப்பட்டாக்கள், மற்றும் 1 நபருக்கு வாரிசு சான்றிதழ் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கலெக்டர் பேசும்போது:-

    இந்த முகாமில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மாரிமுத்து, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், துணை தலைவர் ஸ்ரீதேவிகாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜாஜெகன், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாகன்ரங்கம், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபாரதிரவிகுமார், முருகன், சங்கர், அனுமந்தன், சுமதிஏழுமலை, மருத்துவர் புகழேந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலெந்து கொண்டனர்.

    • இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்
    • பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு, நாட்டறம்பள்ளி பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ஆத்தூர்குப்பம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் பூட்டி இருந்த குடோனை, பூட்டு உடைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தடை செய்யப்பட்ட சுமார் 1 டன் எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஆத்தூர்குப்பம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோனை, கேத்தாண்டப்பட்டியை சேர்ந்த ராஜூ என்கிற பூவரசன் ( வயது 30) மற்றும் அவரது தம்பி பொன்னரசன் ( 25) ஆகியோர் வாடகை எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பொன்னரசனை கைது செய்த போலீசார், அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து நாட்டியம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பூவரசனை தேடி வருகின்றனர்.

    • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அபூபக்கர் வயது (32) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ரெட்டி தொப்பு பகுதியில் சேர்ந்த ஓரு பெண்ணிடம் செல்போன் மூலம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் வாலிபர் போனில் பேச முயற்சி செய்தார்.

    அந்த பெண் இவரை தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் தினமும் இந்த பெண்ணிற்கு வாலிபர் போன் செய்து வந்ததாக தெரிகிறது

    இந்த நிலையில் நேற்று அந்த பெண் வீட்டிற்கு சென்று அபுபக்கர் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பெண்ணிடம் கையை பிடித்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபூபக்கரை ஜெயிலில் அடைத்தனர்.

    • பெற்றோர் புகாரின் பேரில் நடவடிக்கை
    • காதலிப்பதாக கூறி ஏமாற்றினார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியைச் சேர்ந்த திலீப் (வயது 23), ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திலீப், மைனர் பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவரது பெற்றோர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், இளம்பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலீப்பை கைது செய்தனர். 

    • சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திருப்பதி கெங்கை அம்மன் கோவில் 90-வது ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பம்பை தாரை தம்பட்டை நாதஸ்வர கச்சேரி உடன் வீர விளையாட்டுக்களுடன் பெரிய குளத்தில் இருந்து திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊர்வலம் முக்கிய வீதி வழியாகச் சென்றது.

    அப்போது அம்மனுக்கு தேங்காய் பாலம் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட்டனர். பெண்கள் பல சாமி வந்து ஆடினர் தொடர்ந்து ஸ்ரீ கெங்கை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு வான வேடிக்கை நடைபெற்றது. பின்னர் மேளதாளர்களுடன் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் சிரசு புறப்பட்டு பெரியகுளம் சென்றடைந்தது.

    பின்னர் அம்மன் கழுத்தில் சிரசு அமர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை ஒட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பதி கெங்கையம்மன் திருக்கோவில் தலைவர் பி. கருணாகரன், செயலாளர்கள் எம்.சண்முகம், எம் சரவணன், பொருளாளர் என் கே தண்டபாணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர்.கண்ணன், டி. ரமேஷ், கோ. செல்வம், நகராட்சி கவுன்சிலர் எஸ் எம் எஸ் சதீஷ் உட்பட கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • தமிழக-ஆந்திர எல்லையில் சோதனை நடந்தது
    • 37 போலீசார் கொண்ட குழுவினர் நடவடிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் வழிகாட்டுதலின்படி, ஆந்திர மாநில போலீசாரும், திருப்பத் தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் இணைந்து தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதி மற்றும் சுற்று பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 37 போலீசார் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

    அப்போது 245 லிட்டர் சாராயம், 3,900 லிட்டர் சாராய ஊறல், சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட் கள் அழிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

    ×