search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alcohol pickle"

    • 2 பேரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்ட்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை அருகே உள்ள தேக்குமரத்தூர் மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டுக்கு நடுவே செல்லும் காணாற்று ஓடையில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 2 பேரல்கள் மற்றும் 1000 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.

    மேலும், இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்காடு மலை கிராமத்தை சேர்ந்த தமிழ், பழனி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • தமிழக-ஆந்திர எல்லையில் சோதனை நடந்தது
    • 37 போலீசார் கொண்ட குழுவினர் நடவடிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் வழிகாட்டுதலின்படி, ஆந்திர மாநில போலீசாரும், திருப்பத் தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் இணைந்து தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதி மற்றும் சுற்று பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 37 போலீசார் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

    அப்போது 245 லிட்டர் சாராயம், 3,900 லிட்டர் சாராய ஊறல், சாராய ஊறல் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட் கள் அழிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

    • 17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்தனர்
    • போலீசார் கீழேகொட்டி தீமூட்டி அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில், அணைக்கட்டு போலீசார் திடீரென சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அல்லேரி மற்றும் ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சிவதற்காக 17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3 ஆயிரத்து 700 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்ப டுத்தாதவாறு நொறுக்கி அவைகளையும் தீமூட்டி அழித்தனர்.

    இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்
    • தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி,

    தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்தவர்களில் 22 பேர் வரை பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சாத்தான் தெரு ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் எரி சாராய ஊரல் இருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி விரைந்து சென்ற போலீசார் அந்த ஊறல் பேரல்களை கைப்படுத்தி அதில் உள்ள சுமார் 200 லிட்டர் எரி சாராய ஊறலை அழித்தனர். விசாரணையில் இந்த எரி சாராய ஊரலை போட்டிருந்த கறம்பக்குடி மேற்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • 800 லிட்டர் ஊறலும் 30 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயனுக்கு கிடைத்த தகவ லின்படி மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப் பிரண்டு ரமேஷ்ராஜ் அறிவுறுத்தலின்பேரில் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தலை மையில் போலீசார் ஜமுனாம ரத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிங்கிணறு ஓடை அருகில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான 800 லிட்டர் ஊறலும் 30 லிட் டர் சாராயமும் கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் அரசு மதுபானங் களை கள்ளத்தனமாக விற் பனை செய்த அத்திமலைபட்டை சேர்ந்த சாந்தி மற்றும் மட்டப் பிறையூர் சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமி ருந்து 143 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • 5 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை, குண்ராணி மலைப்பகுதியில் நீர் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் நீரோடையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தேடிபார்த்தனர்.

    பின்னர் நீரோடையின் அருகில் நீர் தேக்க பேரல்கள் இருப்பதை பார்த்தனர்.

    அதனை நோக்கி செல்லும் போது அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் திடீரென தப்பி ஓடினர்.

    இதனையடுத்து தீவிரமாக தேடி ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெள்ளம், பட்டைகள் கலந்து 9 பேரல்களில் ஊற வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய ஊறலை கீழே தள்ளி அழித்தனர். இதன்பின் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு இருந்த அனைத்து பொருட் களையும் தீயிட்டு கொளுத்தினர்.

    தப்பி ஓடிய சாராய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×