தேக்குமரத்தூர் மலை கிராமத்தில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

2 பேரை தேடி வருகின்றனர் போலீசார் விசாரணை
தேக்குமரத்தூர் மலை கிராமத்தில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

அணைக்கட்டு:

வேலூர் போலீஸ் சூப்பிரண்ட்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை அருகே உள்ள தேக்குமரத்தூர் மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, காட்டுக்கு நடுவே செல்லும் காணாற்று ஓடையில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 2 பேரல்கள் மற்றும் 1000 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.

மேலும், இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்காடு மலை கிராமத்தை சேர்ந்த தமிழ், பழனி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com