3700 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றினர்

17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்தனர் போலீசார் கீழேகொட்டி தீமூட்டி அழித்தனர்
3700 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றினர்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில், அணைக்கட்டு போலீசார் திடீரென சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அல்லேரி மற்றும் ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சிவதற்காக 17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3 ஆயிரத்து 700 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

மேலும் போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்ப டுத்தாதவாறு நொறுக்கி அவைகளையும் தீமூட்டி அழித்தனர்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com