என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் சிரசு"

    • சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திருப்பதி கெங்கை அம்மன் கோவில் 90-வது ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பம்பை தாரை தம்பட்டை நாதஸ்வர கச்சேரி உடன் வீர விளையாட்டுக்களுடன் பெரிய குளத்தில் இருந்து திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊர்வலம் முக்கிய வீதி வழியாகச் சென்றது.

    அப்போது அம்மனுக்கு தேங்காய் பாலம் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட்டனர். பெண்கள் பல சாமி வந்து ஆடினர் தொடர்ந்து ஸ்ரீ கெங்கை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு வான வேடிக்கை நடைபெற்றது. பின்னர் மேளதாளர்களுடன் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் சிரசு புறப்பட்டு பெரியகுளம் சென்றடைந்தது.

    பின்னர் அம்மன் கழுத்தில் சிரசு அமர்த்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை ஒட்டி திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பதி கெங்கையம்மன் திருக்கோவில் தலைவர் பி. கருணாகரன், செயலாளர்கள் எம்.சண்முகம், எம் சரவணன், பொருளாளர் என் கே தண்டபாணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ஆர்.கண்ணன், டி. ரமேஷ், கோ. செல்வம், நகராட்சி கவுன்சிலர் எஸ் எம் எஸ் சதீஷ் உட்பட கமிட்டி உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    ×