என் மலர்
திருப்பத்தூர்
- 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்
- 3 மணி நேர சோதனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் 2 இடங்களில் தோல் மற்றும் தோல் பொருள்கள் விற் பனை செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்தநிறுவனத் துக்கு ஜிஎஸ்டி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர்.
ஆனால் 2 இடங்களிலும் நிறு வனத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஆம்பூர் சிக்கந்தர் திப்பு தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அங்குள்ள அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண் டனர். அந்த நிறுவனத்தின் விற் பனை தொடர்பான ஆவணங் களை ஆய்வு செய்தனர். நிறுவனத்தின் பணியாளர்களிட மும் விசாரணை நடத்தினர்.
சுமார் 3 மணி நேர சோதனைக் குப் பிறகு அதிகாரிகள் புறப்பட் டுச் சென்றனர். வரி ஏய்ப்பு கார ணமாக சோதனை நடத்தப்பட்ட தாக கூறப்படுகிறது.
- டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.
இது குறித்து தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாகவும், திங்கட்கிழமை நடைபெறும் முகாமில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திம்மாம்பேட்டை போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ஆவாரங்குப்பம் அருகே உள்ள பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை மடக்கி பிடித்தனர்.
போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 51) என்பதும் அவர் ஆற்று பகுதியில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் அள்ளி விற்று வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசார் அவர் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மணல் திருட்டை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பாட்டில் ரூ.5 கூடுதலாக விற்க தடை
- ரூ.11,800 அபராதம்
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 2-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் வேலூர்,திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒரே நிர்வாகத்தில் கீழ் செயல்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 மது கடைகளும்,வேலூர் மாவட்டத்தில் 68 கடைகளும் இயங்கி வருகின்றன.
இதில் பெரும்பாலான கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதலாக பணம் பெறுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் பூங்கொடி கூறியதாவது
அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டில்களில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிகம் கொடுக்க வேண்டாம் என கடைகளில் ஆய்வுக்குச் செல்லும் பொழுது மது வாங்க வருபவர்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளோம்.
கடந்த மாதம் 8-ந் தேதி முதல் ஜூன் 20 -ந் தேதி வரை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.5 கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக பெற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.5900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.10 அதிகமாக பெற்று மது விற்பனை செய்தவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.11,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் பகுதியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கந்தனேரி டாஸ்மாக் கடையில் வாடிக்கை யாளர்களை அவமதித்ததாக கடை ஊழியர் ஒருவர் ஒடுகத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- 12 பாட்டில்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது நாட்டறம்பள்ளி அருகே ஏரியூர் பகு தியில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 57) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- துணை சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணியை வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு 2 கிலோமீட்டர் தூரம் மாணவிகள் நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் வாணியம்பாடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர். முகமது இலியாஸ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.பசுபதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு மது ஒழிப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டு கல்லூரி சாலை, நியூ டவுன் வழியாக பஸ் நிலையம் அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி வட்டார போக்குவரத்து கழகம், வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் பையாஸ் கமால் மருத்துவமனை ஆகியோர் இணைந்து ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். மோடார் வாகன ஆய்வாளர் வெங்கட் ராகவன் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் கண் மருத்துவர் பரஹான் சவூத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி பஸ், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டார்.
மேலும் கண்பார்வை குறைபாடு உள்ள டிரைவர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இதில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, இஸ்லாமிய கல்லூரி தமிழ் துறை தலைவர் ப.சிவராஜி, என். வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சங்க பொருளாளர் ஏ.அருண்குமார் நன்றி கூறினார்.
- கணவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் அருங்கல் துருகத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 51). ராணுவ வீரர். இவரது மனைவி புனிதா (41). இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கணவன் மனைவி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக ரத்தினகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை புனிதா பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூமி பூஜை நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி, மல்லப்பள்ளி மற்றும் ஏரியூர் ஆகிய பகுதிகளில் புதியதாக ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தேவராஜி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி, நாயனசெருவு, வெள்ளநாயாக்கனேரி, பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனிசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மு.மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 4 செட் சீருடை,. பாய், போர்வை போன்றவை வழங்கப்படுகிறது
- ஆதார் அட்டை நகல், வங் கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் கல்லூரி மாணவ,மாணவியர் ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 பள்ளி மாணவர் விடுதிகளும், 3 பள்ளி மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 13 விடுதிகள் இயங்கி வருகின்றன.
இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகளில் பயி லும் அனைத்து மாணவ, மாணவியரும் தங்கி, உணவருந்தி கல்வி பயில தகுதியுடையவர் உரிய இட ஒதுக்கீடு விதிகளின்படி விடுதி வசதி வழங்கப்படும்.
மேற்படி, விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் தரமான உணவு, பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை,. பாய், போர்வை போன்றவை வழங்கப்படுகிறது.
மாலை நேரங்களில் விளையாட விளையாட்டு பொருள்கள் வழங் கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக் குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங் கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- அண்ணனுக்கு வலைவீச்சு
- பூட்டை உடைத்து சோதனை செய்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா, ஆத்தூர்குப் பம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்த குடோனை கேத்தாண் டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு என்ற பூவரசன் என்பவர் கடந்த5மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக வாடகைக்கு எடுத்துள்ளார்.
இந்த நிலை யில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வாணியம்பாடிஇன்ஸ் பெக்டர் நாகராஜ், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் குடோனின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.
அப்போது குடோனில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அண் ணன்-தம்பிகளான பூவரசன், பொன்னுரசன் (வயது 25) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவுசெய்தனர். இதில் பொன்னுரசனை போலீசார் கைது செய்தனர். பூவரசனை தேடி வருகின்றனர்.
- வருவாய் அலுவலர் ஆய்வு
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்றம்பள்ளி வீடற்ற மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க பணியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நாட்டறம்பள்ளி பகுதியில் மூக்கனூர், சந்திரபுரம், ஜெயபுரம், வெலக்கல்நத்தம் ஆகிய பகுதியில் அதிகளாவில் உள்ள வீடற்ற மாற்று திறனாளிகள் உள்ளனர்.
இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லட்சுமி ஆய்வு செய்தார்.
அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய் அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே நாட்றம்பள்ளி சாலையில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொது அறிவு, தமிழ் பாடம் ஆகிய பாடங்களை பயிற்சியில் கலந்துகொண்ட போட்டித் தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் பாடம் நடத்தினார்.
மேலும் இந்த பயிற்சியின் போது பள்ளியின் நிறுவனர் கே.எஸ். சிவப்பிரகாசம், முதல்வர் கிரிநாத், பயிற்றுனர்கள் பாலாஜி, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






